எனக்கு ஹீரோயின் இந்த நடிகையா?.. எம்ஜிஆர் நடிக்க மறுத்த நடிகை யார் தெரியுமா?..
தமிழ் சினிமாவில் கோலோச்சிய லட்சிய நடிகராக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் எம்ஜிஆர். பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர், மக்கள் திலகம் என்று அனைவராலும் அன்பால் அழைக்கப்படும் எம்ஜிஆர் அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக வாழ்ந்தார்.
அவரின் அடக்கமான அக்கறை, மக்கள் மீது காட்டிய அன்பு அவரை மிகப்பெரிய தலைவராக்கியது. எளிதாக பழகக்கூடிய அளவுக்கு மக்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தார் எம்ஜிஆர். சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக மாறினார்.
எம்ஜிஆர் படம் என்றாலே திரையரங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலும் அவரின் சண்டைக்காட்சிகளை பார்க்கவே மக்கள் கூட்டம் அலைமோதியது. அவருடன் பெரும்பாலான நடிகைகள் ஜோடியாக நடித்திருந்தனர். குறிப்பாக சரோஜா தேவி, ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, தேவிகா, பத்மினி, பானுமதி என அனைத்து முன்னனி நடிகைகளும் ஜோடியாக நடித்து விட்ட்னர்.
இதையும் படிங்க : “உங்க படம் பார்த்தா கொல்லனும் போல தோணுது”… ரஜினியை நேரிலேயே வம்புக்கு இழுத்த ராதா ரவி…
ஆனால் ஒரு நடிகை மட்டும் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடிக்கவில்லை. அந்த நடிகை விஜயகுமாரி. ஏனெனில் நிஜ வாழ்க்கையில் எம்ஜிஆரும் விஜயகுமாரியும் உடன்பிறந்தவர்கள் போல பழகினார்களாம். கருணா நிதி, விஜயகுமாரியின் கணவரான எஸ். எஸ்.ஆர் , எம்ஜிஆர் ஆகிய மூவரும் அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக விளங்கினர்.
அதன் காரணமாகவே கருணாநிதியையும் எம்ஜிஆரையும் தன் உடன் பிறவா சகோதரர்களாக பாவித்திருக்கிறார் விஜயகுமாரி. அதே போல தான் எம்ஜிஆரும் விஜயகுமாரியையும் தன் உடன்பிறவா சகோதரியாக பாவித்திருக்கிறார். இதன் காரணமாகவே எம்ஜிஆர் தனக்கு ஜோடியாக விஜயகுமாரி நடிக்க கூடாது என்பதில் தீவிரமாக இருந்திருக்கிறார்.
இதையும் படிங்க : பேசாம நீங்களே கல்யாணம் பண்ணியிருக்கலாம்!.. குஷ்புவிடம் வேதனையை சொல்லி புலம்பிய பிரபல நடிகரின் மனைவி..
ஏன் எம்ஜிஆர்-சரோஜா தேவி நடிப்பில் வெளியான நாடோடி மன்னன் படத்தில் விஜயகுமாரி நடிக்க வாய்ப்பு வந்தும் இதன் காரணமாகவே தான் அந்த படத்தில் விஜயகுமாரியால் நடிக்க முடியாமல் போயிருக்கின்றது. மேலும் சில படங்களில் நடித்திருந்தாலும் ஒன்று தங்கையாக நடித்திருப்பார்.