அஜித் மேல் இப்போ வரைக்கும் கோபம் இருக்கு! என்ன லைலா இப்படி சொல்லிட்டாங்க?

Published on: August 29, 2024
laila
---Advertisement---

Laila: தமிழ் சினிமாவின் 2கே கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகை லைலா. தனது குழந்தைத்தனமான சிரிப்பால் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர். படங்களில் மட்டும் தான் அவருடைய சோகமான முகத்தை பார்க்க முடியும். நேரில் எப்பொழுதுமே சிரித்துக் கொண்டே இருக்கும் முகத்தோற்றம் கொண்டவர் லைலா.

தமிழில் அஜித், சூர்யா, விக்ரம், சரத்குமார் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழ்பெற்றவர். ஒரு பீக் நடிகையாக இருந்த லைலா விஜய்யுடன் மட்டும் நடிக்கவில்லையே என்ற ஒரு வருத்தம் ரசிகர்களுக்கு இருந்தது. உன்னை நினைத்து படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் தான். விஜய் மற்றும் லைலா சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கினார்கள்.

இதையும் படிங்க:நடிகைகளிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டா செருப்பால அடிங்க!.. பொங்கும் விஷால்!…

ஆனால் சில பல காரணங்களால் விஜய் அந்த படத்தில் இருந்து விலகினார். அதன் பிறகு தான் சூர்யாவுடன் இந்த படத்தில் நடித்தார் லைலா. அதனை அடுத்து  நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்பொழுது தான் கோட் படத்தில் விஜய்யுடன் நடித்திருக்கிறார் லைலா. இதை விஜயிடமே சொல்லி இருக்கிறாராம். அதாவது எல்லா ஹீரோக்களுடனும் நடித்து விட்டேன்.

உங்களுடன் மட்டும் தான் சேர்ந்து நடிக்கவில்லை. இந்த படத்தின் மூலம் அது நிறைவேறி விட்டது என்று கூறியதாக லைலா ஒரு பேட்டியில் தெரிவித்தார். இந்த நிலையில் அஜித்தை பற்றி லைலாவிடம் கேட்டதற்கு அஜித் மேல் நான் இன்றுவரை மிகவும் கோபமாக இருக்கிறேன் என கூறினார்.

இதையும் படிங்க: ஃபீல் பண்ணும் கோபி… விஜயாவை அலறவிட்ட ஸ்ருதி… வாயை கொடுத்து சிக்கிய மீனா..

அதற்கான காரணத்தை கேட்டபோது அவர் அனைவருக்கும் பிரியாணி செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் எனக்கு இதுவரை ஒரு முறை கூட பிரியாணி சமைத்துக் கொடுத்ததே இல்லை. அதனால் தான் அவர் மீது நான் கோபமாக இருக்கிறேன் என கூறினார் லைலா.

ajith laila
ajith laila

தீனா மற்றும் திருப்பதி போன்ற படங்களில் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்த லைலா ஒரு முறையாவது எனக்கு அவர் பிரியாணி சமைத்து கொடுத்திருக்கலாம் எனக் கூறி வருத்தப்பட்ட அந்த வீடியோ தான் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: ஓகே சொல்லாமலா வர்றாங்க! சீரியல் நடிகைக்கு நடந்த கொடுமை தெரியுமா? பொங்கிய ஷகீலா

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.