சும்மா பாக்கணும்னு கூப்பிட்டு மூஞ்சுல சேறை பூசி விட்டுட்டாங்க! –ஆடிசனுக்கு வந்த அதர்வாவிற்கு பாலா செய்த காரியம்.!

by Rajkumar |   ( Updated:2023-03-06 06:29:10  )
சும்மா பாக்கணும்னு கூப்பிட்டு மூஞ்சுல சேறை பூசி விட்டுட்டாங்க! –ஆடிசனுக்கு வந்த அதர்வாவிற்கு பாலா செய்த காரியம்.!
X

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் படத்தில் நடித்தால் திரைத்துறையில் பெரும் மார்க்கெட் கிடைக்கும் என கூறப்படும் இயக்குனர்களில் இயக்குனர் பாலாவும் ஒருவர். சின்ன கதாநாயகர்களாக இருப்பவர்கள் கூட பாலா படத்தில் நடித்து பெரும் உயரத்தை தொட்டுள்ளனர்.

அதில் முக்கியமான நடிகர் என்றால் சியான் விக்ரமை சொல்லலாம். பாலா இயக்கத்தில் அவர் நடித்த சேது திரைப்படமே அவரது சினிமா வாழ்க்கையை மாற்றி போட்டது. அந்த படத்தில்தான் அவருக்கு சியான் என்கிற பெயரும் வந்தது.எனவே பாலா திரைப்படத்திற்கு நடிகர்கள் மத்தியில் ஒரு முக்கியத்துவம் உண்டு.

எரியும் பனிக்காடு என்கிற நாவலை தழுவி இயக்குனர் பாலா எடுத்த திரைப்படம் பரதேசி. இந்த படத்திற்காக அவர் நடிகர்களை தேடி வந்தார். அந்த காலக்கட்டத்தில்தான் நடிகர் அதர்வா பானா காத்தாடி, முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய இரு படங்களில் நடித்திருந்தார்.

எனவே பாலா படத்தில் நடிப்பது தனக்கு ஒரு நல்ல முன்னேற்றமாக இருக்கும் என பாலாவிடம் சென்று படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டார். அவரை பார்த்த பாலா முதலில் இவரை வைத்து லுக் டெஸ்ட் எடுத்து பார்க்கலாம் என முடிவு செய்தார்.

அடுத்த நாள் அதர்வாவை அழைத்த பாலா, அவருக்கு முடியை வித்தியாசமாக வெட்டிவிட்டு, ஒரு கோணிப்பையில் செய்த உடையை உடுத்த சொன்னார். பிறகு கொஞ்சம் சேறை எடுத்து அதர்வாவின் முகம் கைகளில் எல்லாம் தடவினார். எல்லாம் முடித்து ஃபோட்டோ எடுத்து பார்த்துவிட்டு சரி அதர்வா இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என முடிவு செய்தார்.

அதன் பிறகுதான் தனது கெட்டப் எப்படி இருக்கிறது என்பதை அதர்வா பார்த்தார். அப்போது அதர்வாவிற்கே இது நாம்தானா? என அதிர்ச்சியாக இருந்துள்ளது. இதை ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

Next Story