பென்ஸ் காரை தொட்டு பார்த்து அடி வாங்கிய மயில்சாமி!.. பிறந்தநாளில் அவருக்கு கிடைத்த சர்ப்பரைஸ்!..

Published on: January 24, 2024
mayilsamy
---Advertisement---

Mayilsamy: சினிமாவில் பல கோடிகளை சம்பளமாக வாங்கும் நடிகர்கள் சொகுசு கார் வாங்குவது சுலபம். இன்னும் சொல்லப்போனால் கோடிகளில் சம்பளம் வாங்கும் பல நடிகர்களும் பல சொகுசு கார்களை வைத்திருப்பார்கள். ஒவ்வொரு காரும் பல கோடி விலை உடையதாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் பெரிய நடிகர்கள் விதவிதமாக சொகுசு கார்களை வாங்குவதை மிகவும் விரும்புவார்கள்.

இப்போதெல்லாம் ஒரு படத்தை சூப்பர் ஹிட் படமாக கொடுத்தால் உடனே இயக்குனருக்கு சொகுசு கார் கிடைத்து விடுகிறது. ஜெயிலர் படம் நல்ல லாபத்தை கொடுத்ததால் ரஜினிக்கும், அப்படத்தின் இயக்குனர் நெல்சனுக்கும் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் விலை உயர்ந்த சொகுசு காரை அவர்களுக்கு பரிசளித்தார்.

இதையும் படிங்க: இரவு 12 மணிக்கு கதவை தட்டிய தயாரிப்பாளர்!.. உடனே நடிக்க ஒப்புக்கொண்ட கமல்!. அட அந்த படமா?!..

சில சமயம் நடிகர்கள் தனக்கு ஹிட் படத்தை கொடுத்த இயக்குனருக்கு கார் ஒன்றை வாங்கி தருவார்கள். மாமன்னன் சூப்பர் ஹிட் அடித்ததால் அப்பட இயக்குனர் மாரி செல்வராஜுக்கு ஒரு காரை வாங்கி கொடுத்தார். விக்ரம் பட ஹிட் அடித்ததால் லோகேஷ் கனகராஜுக்கு கமலும் ஒரு காரை வாங்கி கொடுத்தார்.

ஆனால், சின்ன சின்ன காமெடி நடிகர்களுக்கு கார் என்பது எப்போதும் ஒரு கனவுதான். படப்பிடிப்பு தளத்திற்கு கூட தயாரிப்பு நிறுவனம் அனுப்பும் காரில்தான் போக முடியும். சினிமாவில் நடித்து வரும் பல நடிகர்களுக்கும் கார் கிடையாது. எனவே, கார் வாங்குவது என்பது பல நடிகர்களின் கனவாக இருக்கும்.

இதையும் படிங்க: தனுஷுக்காகத்தான் முதல் வரிசையில் 2 சீட் கேட்டாரா ரஜினி?!.. வீடியோவுக்கு பின்னாடி இருக்கும் ஸ்டோரி இதுதான்!..

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் மறைந்த நடிகர் மயில்சாமி. அதோடு, சின்ன சின்ன நடிகர்களுக்கும் பல உதவிகளை செய்து வந்தவர். இவர் ஒருமுறை ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்த பென்ஸ் காரை ஆசையாக தொட்டு பார்த்துள்ளார். அப்போது காரின் சொந்தக்காரருக்கு அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு காருக்கு சொந்தக்காரர் மயில்சாமியை அடித்துவிட்டாராம்.

ஆனால், அதே மயில்சாமிக்கு அவரின் 50வது பிறந்தாளில் அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் சேர்ந்து அவருக்கு ஒரு பென்ஸ் காரை பரிசாக வாங்கி கொடுத்தார்களாம். இந்த தகவலை சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கூறியிருந்தார்.

இதையும் படிங்க: அஜித்தோட டின்னர் சாப்பிடுறதுக்கு கொடுத்து வச்சிருக்கணும்!.. பிக் பாஸ் பிரபலம் வெளியிட்ட செம பிக்ஸ்!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.