கோபத்தில் சினிமாவுக்கு வந்த ஆதிக் ரவிச்சந்திரன்!.. இப்படி ஒரு செண்டிமெண்ட் ஃபிளாஷ்பேக்கா!..
திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் மூலம் திடீரென இயக்குனராக மாறி அதிர வைத்தவர் ஆதிக் ரவிச்சந்திரன். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடல்ட் காமெடி படமாக வெளியான இந்த திரைப்படம் இளம் பெண்கள், குடும்ப பெண்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள் என எல்லோரையும் ரசிக்க வைத்ததுதான் ஆச்சர்யம்.
முதல் படமே ஹிட் என்பதால் சிம்பு இவருக்கு வாய்ப்பு கொடுத்தார். அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் உருவானது. அங்குதான் வசமாக சிக்கினார் ஆதிக். சிம்பு செய்த அட்ராசிட்டியில் அவர் எடுக்க நினைத்த கதையை எடுக்க முடியாமல் போய், ஒரு மாதிரி ஒப்பேத்தி அந்த திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். படமோ ஊத்திக்கொண்டு தயாரிப்பாளருக்கு ரூ.10 கோடிக்கும் மேல் நஷ்டம். அந்த பஞ்சாயத்து இப்போதுவரை முடியவில்லை.
இதையும் படிங்க: கண்ணான கண்ணே சீரியல் ஹீரோவின் கள்ளக்காதல்… வந்தா எல்லாம் ஒன்னா பிரச்னைக்கு இறங்குவீங்களோ..!
அதன்பின் காதலை தேடி நித்யானந்தா, வெர்ஜின் மாப்பிள்ளை, பஹீரா என சில மொக்கைப்படங்களை இயக்கினார். இந்த படங்களும் ஓடவில்லை. அதன்பின் ஒரு ஹிட் படத்தை கொடுத்தே ஆகவேண்டும் என்கிற வெறியில் ஆதிக் இறங்கி அடித்த திரைப்படம்தான் மார்க் ஆண்டனி. எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தை ரஜினியே பாராட்டியிருந்தார்.
இப்போது அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு அவரை தேடிவந்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குனராவதற்கு பின்னால் ஒரு சோகமான செண்டிமெண்ட் இருப்பது பலருக்கும் தெரியாது. ஆதிக்கின் அப்பா ரவி கந்தசாமி சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில் திரையுலகில் பல வருடங்கள் போராடியவர். ஆனால், இயக்குனராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: ஷாக்கிங்.. அபிஷேக் பச்சன் வீட்டை விட்டே வெளியேறிய ஐஸ்வர்யா ராய்.. விவாகரத்து வதந்தி உண்மையானதா?..
காலையில் உற்சாகமாக கிளம்பும் அவர் மாலை மிகவும் சோகமான முகத்துடன் வீடு திரும்புவாராம். இதைபார்த்து அப்செட் ஆன ஆதிக், எந்த சினிமா உலகம் எனது அப்பாவை உதாசீனப்படுத்தியதோ அதில் நான் நுழைந்து பெரிய இயக்குனராக வேண்டும் என உறுதியெடுத்து இப்போது அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு வந்துள்ளார். அதோடு, நடிகர் பிரபுவின் மகளை திருமணம் செய்து நடிகர் திலகம் குடும்பத்தில் உறுப்பினராக மாறியிருக்கிறார்.
என் அப்பாவிடம் இருக்கும் கதைகளை படமெடுத்தால் இன்னும் 40 படங்கள் எடுப்பேன் என அவர் ஒரு பேட்டியிலும் சொல்லியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் சிகரெட் கேட்டு கெஞ்சிய வடிவேலு.. அப்படி வளர்ந்தவர்தான் இப்போ இப்படி!…