பாலச்சந்தர் ‘ரஜினி’ என பெயர் வைக்க காரணம் இதுதானாம்!.. இதுக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்கா?!..

by சிவா |
balachandar
X

Rajinikanth: தமிழ் திரையுலகில் கதை, திரைக்கதையில் பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்தவர் இயக்குனர் பாலச்சந்தர். நாடகங்களை இயக்கி வந்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவையும் இயக்கினார். துவக்கம் முதலே வித்தியாசமான, யாரும் தொட யோசிக்கும் கதைகளை இயக்கியவர் அவர்.

அதனால்தான் 70,80களில் சினிமாவில் புதிதாக சினிமாவில் நுழைந்த இயக்குனர்களுக்கு பாலச்சந்தர் வழிகாட்டியாக இருந்தார். ஹீரோக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருந்த காலத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை இயக்கியவர் இவர்.

இதையும் படிங்க: பாபா படம் ஃபிளாப்!.. ரஜினி கேட்ட கேள்வியில் அதிர்ந்து போன லிங்குசாமி!..

கமல்ஹாசனை வாலிப வயது முதலே சினிமாவை சொல்லிக்கொடுத்து வளர்த்தெடுத்தவர் பாலச்சந்தர். நடிப்பின் பல பரிமாணங்களையும் அவருக்கு கற்றுக்கொடுத்தவர். சுஜாதா, ரஜினிகாந்த், ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி, ஜெயசுதா, சரிதா, ரேணுகா, நாசர், பிரகாஷ் ராஜ், ரமேஷ் அரவிந்த், விவேக் ஆகியோரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவர்.

ரஜினியிடம் ஏதோ இருக்கிறது என்பதை முதலில் கண்டுபிடித்தவர் பாலச்சந்தர்தான். சிவாஜி ராவ்வாக வந்தவரிடம் ‘உன்னோட பேர மாத்தப்போறேன். உனக்கு பிடிச்ச பேர யோசிச்சிட்டு வா’ என சொல்லி அனுப்பினார். ரஜினிக்கோ ‘சரத்’ அல்லது தனது குடும்ப பெயரான கெய்க்வாட் என முடியும் எதாவது பெயரை வைக்க ஆசை. ஆனால், அவரின் நண்பர்களிடம் இதுபற்றி ஆலோசித்தபோது அவர்கள் அதை வேண்டாம் என சொல்லிவிட்டனர்.

இதையும் படிங்க: எவன்கிட்டயும் நான் போய் சான்ஸ் கேட்க மாட்டேன்… சினிமாவால் கடுப்பாகி பாலச்சந்தர் எடுத்த முடிவு!..

எனவே, ‘நீங்களே ஒரு நல்ல பெயராக எனக்கு வைத்துவிடுங்கள்’ என பாலச்சந்தரிடம் சொல்ல, உனக்கு ‘ரஜினிகாந்த்’ என பெயர் வைத்திருக்கிறேன். காந்த் என்னோட ராசிப்பெயர். நான் எடுத்த மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில் அவருக்கு 2 மகன்கள்.

ஒருவனின் பெயர் ஸ்ரீகாந்த். அந்த பெயரில் ஒரு நடிகர் இருக்கார். மிச்சமிருக்க ரஜினிகாந்த் பெயரை யாருக்கு வைக்கலாம் என ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருந்தேன். இப்ப நீ வந்துட்ட.. இன்னையிலிருந்து உன் பேர் ரஜினிகாந்த்’ என சொல்லி அவருக்கு ஆசிர்வாதம் செய்ய ரஜினி மனமுவந்து நன்றி சொன்னாராம்.

இதையும் படிங்க: சாரிப்பா என்ன மன்னிச்சுடு… இரண்டு வருடம் கழித்து நடிகரிடம் மன்னிப்பு கேட்ட பாலச்சந்தர்!..

Next Story