Cinema History
இந்த குழந்தைக்கும் ‘சின்னத்தம்பி’ படத்துக்கும் முக்கிய சம்பந்தம் இருக்கு!.. சிவாஜியே ஆச்சர்யப்பட்ட ரகசியம்…
இளைய திலகம் பிரபு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சின்னத்தம்பி திரைப்படம் அவருக்கு ஸ்பெஷல்தான். ஏனெனில், அப்படம் மெகா வெற்றி பெற்ற திரைப்படமாகும். பி.வாசு இயக்கிய இப்படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக குஷ்பு நடித்திருந்தார். இப்படம் 1991ம் ஆண்டு வெளியானது. கவுண்டமணியின் காமெடி இப்படத்தில் அல்ட்டிமேட்டாக அமைந்தது.
இப்படத்தின் நூறாவது நாள் விழா தஞ்சாவூரில் நடைபெற்றது. எனவே, பி.வாசு, பிரபு உள்ளிட்ட படக்குழு காரில் செல்வது எனவும், செல்லும் வழியில் பிரபுவின் அப்பாவும், நடிகர் திலகமுமான சிவாஜிக்கு சொந்த ஊராக்கு சென்று அவரை சந்தித்துவிட்டு செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது. அன்று சிவாஜி தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.
அவரை சந்தித்த பின் சின்னத்தம்பி படத்தின் ஒளிப்பதிவாளர் ரவீந்தரை சிவாஜிக்கு அறிமுகம் செய்த பிரபு ‘அப்ப இது யார் என தெரிகிறதா?.. பாவமன்னிப்பு திரைப்படத்தில் நீங்கள் கையில் வைத்திருந்த குழந்தைதான் இந்த ரவி. இவர்தான் சின்னத்தம்பி படத்தின் ஒளிப்பதிவாளர்’ என சொன்னதும் சிவாஜிக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோதம். ரவியின் தோளை பிடித்து ‘மிகவும் மகிழ்ச்சி; என பாராட்டினாராம். மேலும், எல்லோருக்கும் பிரியாணி விருந்து தயார் செய்துள்ளேன். சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள் என வாழ்த்தினாராம்.
ரவி என்கிற ரவீந்தர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். அரசிளங்குமாரி படத்தில் எம்.ஜி.ஆர் இவரை தூக்கி வைத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உன் வரி எனக்கு பிடிக்கலையா!.. முகத்துக்கெதிராக சொன்ன எம்.எஸ்.வி.. சமாதானப்படுத்திய எம்ஜிஆர்..