திடீரென மதம் மாறிய திலீப்!.. கடைசி நேரத்தில் ரோஜா பாட டைட்டிலில் மாற்றப்பட்ட பெயர்!..

இளையராஜாவின் மீது ஏற்பட்ட கோபத்தில் இயக்குனர் கே.பாலச்சந்தர் தான் தயாரித்த ரோஜா படத்தில் ஒரு புதிய இசையமைப்பாளரை அறிமுகம் செய்ய வேண்டும் என நினைத்தார். இந்த படத்திற்கு முதலில் இளையராஜா இசையமைப்பதாகத்தான் இருந்தது. ஆனால், இது விஷயமாக பேச அவரை சந்திக்க மணிரத்னம் போன போது அவரை கும்பலில் ஒருவராக காத்திருக்க வைத்தார் இளையராஜா.

இதனால் கடுப்பான பாலச்சந்தர் மணிரத்னத்தை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அப்போதுதான் ‘திலீப் என்கிற சின்ன பையன் நன்றாக இசையமைக்கிறான். விளம்பரங்களுக்கெல்லாம் இசையமைத்து வருகிறான். அவனை போய் பாருங்கள்’ என பாலச்ந்தர் சொல்ல திலீப்பை போய் சந்தித்தார் மணிரத்னம்.

rahman

திலீப்பின் அப்பா சேகர் மலையாளத்தில் பல படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார் என்பது தெரிய வந்தது. மேலும், திலீப் வைத்து இசைக்கருவிகள், அவரின் ஸ்டுடியோ செட்டப் என எல்லாமே மணிரத்னத்துக்கு பிடித்துப்போனது. ரோஜா படத்த்திற்கு திலீப்தான் இசையமைப்பாளர் என முடிவு செய்தார்.

இப்படித்தான் ரோஜா படத்திற்கு இசையமைக்க துவங்கினார் திலீப். படம் தயாராகி படத்தின் டைட்டில் கார்டில் இசை திலீப் என்றே போடப்பட்டிருந்தது. ரிலீசுக்கு ஒரு வாரம் இருந்தபோதுதான் திலீப்பின் அம்மாவிடமிருந்து போன் வந்தது 'நாங்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டோம். எனவே, திலீப் என போட வேண்டாம் ஏ.அர்.ரஹ்மான் என போடுங்கள்' என கோரிக்கை வைத்தார்.

roja

roja

அப்படித்தான் திலீப் ஏ.ஆர்.ரஹ்மானாக மாறினார். ரோஜா படத்தின் வெற்றிக்கு அவர் கொடுத்த இசை முக்கிய காரணமாக இருந்தது. இந்த படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. முதல் படத்திற்கே தேசிய விருது வாங்கினார் ரஹ்மான். அதன்பின் அவரின் துள்ளலான இசை அவருக்கு பல ரசிகர்களை பெற்று தந்தது.

இசைப்புயலாக மாறி இப்போதும் திரையுலகை கலக்கி கொண்டிருக்கிறார். ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக ஆஸ்கர் விருதும் வாங்கினார்.

Related Articles
Next Story
Share it