இரண்டு நிமிடத்தில் நடிக்க சம்மதித்த நடிகர் முரளி... ஆனா இப்பவும் அது ஒரு காதல் காவியம்!...

by சிவா |
murali
X

murali

தமிழ் சினிமாவில் இயக்கும் வாய்ப்புகளை பெறுவதற்கு கதை சொல்லும் திறமை மிகவும் முக்கியம். சிலர் கதை சொல்லும் ஸ்டைலிலேயே தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும் கவுத்து விடுவார்கள். இதற்கு எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பல உதாரணங்கள் உண்டு. சிலருக்கு கதை சரியாக சொல்ல வராது ஆனால் சரியாக எடுப்பார்கள். மணிரத்னம், வசந்த், பாலா சில உதாரணங்கள் உண்டு.

சில இயக்குனர்கள் கதையை ஒவ்வொரு காட்சியாக 2 மணி நேரம் சொல்லி ரசிக்க வைப்பார்கள். சிலர் ஒரே வரியில் கதையை சொல்லி நடிகர்களை அசத்திவிடுவார்கள். அஜித்தெல்லாம் குறைந்தபட்சம் இரண்டு நிமிடம்தான் கதை கேட்பார். இயக்குனர் மீதுள்ள நம்பிக்கையில் மட்டுமே அவர் படத்தை ஓகே செய்வார். ஆனால், விஜய்,சூர்யா ஆகியோருக்கு முழுக்கதையையும் சொல்ல வேண்டும்.

actors

actors

உதவி இயக்குனர்கள் பலரும் கதைகளை வைத்துக்கொண்டு சென்னை சாலிகிராமத்தில் ஒரு ஹீரோ கிடைக்க மாட்டாரா அல்லது தயாரிப்பாளர் கிடைக்க மாட்டாரா என தவித்து வருகிறார்கள். சினிமா அப்படித்தான். சரியான நேரத்தில் இம்ப்ரஸ் செய்யாவிட்டால் வாய்ப்பு பறிபோய்விடும். கதை சொல்ல வாய்ப்பு கிடைத்து மிஸ் செய்துவிட்டால் அந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காமல் போகவே வாய்புண்டு.

இப்படித்தான் ஒரு உதவி இயக்குனர் ஒரு காதல் கதையை உருவாக்கினார். அதை தயாரிப்பாளரிடம் சொல்ல அவருக்கு பிடித்துப்போய் முரளியை சென்று பார்த்து அந்த கதையை அவரிடம் சொல்ல சொல்லியுள்ளார். தகவல் முரளிக்கு சொல்லப்பட்டது. அவரும் வர சொல்லிவிட்டார். அந்த உதவி இயக்குனர் ஆவலுடன் முரளி வீட்டுக்கு செல்ல முரளியோ ‘நான் அவசரமாக கர்நாடகா செல்கிறேன். அடுத்த வாரம் வந்துவிடுவேன். அப்போது வந்து சொல்லுங்கள்’ எனக்கூற அந்த உதவி இயக்குனருக்கு பேரதிர்ச்சி.

murali

சார் ஒரு அரை மணி நேரம் மட்டும் டைம் கொடுங்கள். கதையை கேளுங்கள்’ என கெஞ்சியுள்ளார். அதற்கு முரளி ‘அரை மணி நேரமா.. வாய்ப்பே இல்லை’ எனக்கூற, ‘சரி 20 நிமிடங்கள் கொடுங்க’ அந்த உதவி இயக்குனர் கெஞ்ச, முரளியோ ‘இப்போது வேண்டாம்.. அடுத்த வாரம் வாருங்கள்’ என உறுதியாக இருக்க, கடைசியாக அந்த உதவி இயக்குனர் ‘சரி சார். இரண்டு நிமிடம் மட்டும் கொடுங்கள்’ எனக்கேட்க ‘இரண்டு நிமிடத்தில் என்ன சொல்வீர்கள்.. சரி சொல்லுங்கள்’ என முரளி கேட்க ‘சார். ஹீரோ கிராமத்தில் இருந்து மருத்துவராக வேண்டும் என சிட்டிக்கு வருகிறான். ஆனால், 5 வருடம் கழித்து கிராமத்திற்கு ஒரு நோயாளியாக திரும்பி செல்கிறான். அதற்கு காரணம் காதல்’ என சொல்ல, முரளிக்கு பிடித்துப்போய் ‘கண்டிப்பாக இதில் நடிக்கிறேன்’ என உறுதியளித்துவிட்டு கிளம்பி சென்றாராம்.

murali

murali

அப்படி உருவாகி ஹிட் அடித்த திரைப்படம்தான் இதயம். அந்த உதவி இயக்குனர்தான் ‘கதிர்’. அந்த படம் பலரையும் பாதித்தது. பலரின் கல்லூரி வாழ்வில் ஏற்பட்ட காதல் அனுபவத்தை பிரதிபலித்து மனதை வருடிய படம் அது. அப்படத்தில் ராஜாவின் இசையில் உருவான அத்தனை பாடல்களும் இப்போதும் பலருக்கும் ஃபேவரைட். அதோடு, இப்போது வரை ‘ இதயம் முரளி’ என பலரும் பேசுகிறார்கள்.

அந்த பட இயக்குனர் கதிர் இதயம் படத்திற்கு பின் உழவன், காதலர் தினம், காதல் தேசம், காதல் வைரஸ் என காதல் படங்களை இயக்கி ரசிகர்களுக்கு காதல் விருந்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதளபாதாளத்திற்குச் சென்ற ஏவிஎம் நிறுவனம்… கரம் கொடுத்து கரை ஏற்றிய அந்த பிரபல தயாரிப்பாளர்!!

Next Story