கதையே பிடிக்கலன்னு சொல்ல விக்ரம் வீர தீர சூரனில் நடித்தது எப்படி?.. ஒரு பிளாஷ்பேக்!

#image_title
Veera dheera sooran: சினிமாவில் எந்த கதை யாரிடம் செல்லும் என சொல்லவே முடியாது. ஒரு நடிகரிடம் சொல்லப்பட்டு அவருக்கு அந்த கதை பிடிக்காமால் வேறொரு நடிகரிடம் போகும். இப்படி ஒரு கதை பலரிடமும் பயணிக்கும். எல்லாம் எங்கு செட் ஆகிறதோ அங்கு அந்த கதை திரைப்படமாக மாறும். சில சமயம் கதை பிடித்திருந்தாலும் அந்த நடிகரால் நடிக்க முடியாமல் போகும்.
கையில் இருக்கும் படங்களை முடித்துவிட்டு வருகிறேன் என நடிகர் சொல்வார். சில இயக்குனர்கள் காத்திருப்பார்கள். சில இயக்குனர்கள் வேறு நடிகரை தேடி போய்விடுவார்கள். இப்படி நல்ல கதைகளில் நடிக்காமல் மிஸ் பண்ணிய பல நடிகர்களும் இருக்கிறார்கள். லிங்குசாமி தான் எழுதிய ரன் மற்றும் சண்டக்கோழி ஆகிய படங்களின் கதையை விஜயிடம்தான் முதலில் சொன்னார்.
ஆனால், விஜய்க்கு பிடிக்கவில்லை. எனவே, ரன் படத்தில் மாதவனும், சண்டக்கோழி படத்தில் விஷாலும் நடித்து அந்த படங்கள் ஹிட அடித்தது. அதிலும், சண்டக்கோழி படத்தை மிஸ் பண்ணி விட்டோமே என விஜயே ஃபீல் பண்ணினார். இப்படி பல கதைகள் சில நடிகர்களால் நிராகரிக்கப்பட்டு வேறு நடிகர் நடித்து ஹிட் ஆகியிருக்கிறது.

#image_title
கமல் நடிக்க வேண்டிய ரோபோ கதையில் ரஜினி நடித்தார். அஜித் நடிக்க வேண்டிய கஜினி படத்தில் சூர்யா நடித்தார். விஜய், விக்ரம், சூர்யா என பலரிடமும் சொல்லி யாரும் நடிக்காமல் இயக்குனர் சேரனே நடித்த திரைப்படம்தான் ஆட்டோகிராப். நடிகர் விக்ரம் கூட பல நல்ல கதைகளை மிஸ் பண்ணியிருக்கிறார்.
அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து 2016ம் வருடம் வெளியான திரைப்படம்தான் சேதுபதி. இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவருடன் ரம்யா நம்பீசன், வேலா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் ஹிட் அடித்தது.
இந்த படம் வெளியான சமயத்தில் விக்ரமிடம் ஒரு கதை சொல்லி இருக்கிறார் அருண். ஆனால், முதல் பாதி நன்றாக இருக்கிறது. இரண்டாம் பாதி சரியில்லை என விக்ரம் சொல்லிவிட்டார். அதன்பின் அருண் இயக்கிய சித்தா படத்தை பார்த்துவிட்டு அருணை அழைத்து ஆகா ஓஹோ என பாராட்டிவிட்டு மீண்டும் கதையை எழுத சொல்லி இருக்கிறார். அப்படி உருவான படம்தான் வீர தீர சூரன் இந்த படம் வருகிற 27ம் தேதி வெளியாகவுள்ளது.