நீ பேசாம பேங்க் வேலைக்கு போயிடு!.. லோகேஷ் கனகராஜை அசிங்கப்படுத்திய திரையுலகம்…

Published on: February 9, 2023
lokesh
---Advertisement---

கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியதோடு, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கும் திரைப்படங்களை ‘லோக்கி யூனிவர்ஸ்’ என ரசிகர்கள் அழைக்க துவங்கிவிட்டனர். அதாவது, ஒரு புதிய உலகத்தை அவர்களுக்கு லோகேஷ் காட்டுவதாக அவர்கள் நம்ப துவங்கியுள்ளனர். அதுவும் விக்ரம் பட மெகா வெற்றிக்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

lokesh
lokesh

லோகேஷ் கனகராஜ் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியவில்லை. கல்லூரி படிப்பை முடித்த பின் ஒரு வங்கியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்படியே ஜாலியாக கிடைக்கும் நேரத்தில் குறும்படங்களை எடுக்க துவங்கினார். அதுதான் அவரை சினிமாவுக்கு அழைத்துவந்துள்ளது.

lokesh

இவர் இயக்கிய முதல் திரைப்படம் மாநகரம். இந்த திரைப்படமும் இப்போது வரை சிலாகிக்கப்பட்டு வருகிறது. தன்னுடையை முதல் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது பற்றி ஒரு பேட்டியில் கூறிய லோகேஷ் ‘மாநகரம் பட கதையை தயார் செய்து பல தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொன்னேன். கதை சொல்வதற்காக பல ஊர்களுக்கும் சென்றேன்.

lokesh

இரண்டு மாதங்களில் 50 முறையெல்லாம் கதை சொல்லியிருக்கிறேன். சிலர் கதை நன்றாக இல்லை என்பார்கள். சிலர் ‘உனக்கு எதுக்குப்பா சினிமா?. மறுபடியும் பேங்க் வேலைக்கு போயிடு’ என்பார்கள். ஆனால், என் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அவர்களை நான் குறை சொல்ல முடியாது. நான் கூறிய கதை அவர்களுக்கு பிடிக்கவில்லை அவ்வளவுதான். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு என்னை நம்பினார். அப்படித்தான் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது’ என தெரிவித்துள்ளார்.

தற்போது விஜயை வைத்து ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார். இப்படம் துவங்கப்பட்ட போதே ரூ.700 கோடியை தாண்டி இப்படம் வியாபாரம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய்யே பார்த்து பயந்த நபர் இவர்தானாம்… கெத்து காட்டும் பிரபல பத்திரிக்கையாளர்… ஓஹோ!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.