விஜயுடன் ஷங்கர் இணைவது உண்மையா?!. இருக்கு ஆனா இல்ல!.. விஷயம் இதுதான்!..

by சிவா |   ( Updated:2023-07-13 14:03:43  )
shankar
X

ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இயக்குனராக மாறியவர் ஷங்கர். அதன்பின் காதலன், ஜீன்ஸ், இந்தியன் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக மாறினார். பெரிய பட்ஜெட்டில் விஸ்வல் ட்ரீட்டாக இவரின் படங்கள் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது. சமுதாய பிரச்சனை தொடர்பான கதை, பாடல்களில் கம்ப்யூட்ட்ர் கிராபிக்ஸ் என ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்தார். பாலிவுட் சென்றும் படம் எடுத்தார்.

ரஜினியை வைத்து எந்திரன், சிவாஜி, 2.0 ஆகிய படங்களை இயக்கினார். தற்போது இந்தியன் 2 படத்தையும், தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் ஆகிய படங்களையும் இயக்கி வருகிறார்.

திடீரென விஜயின் 70வது படத்தை ஷங்கர் இயக்கவுள்ளதாகவும், அது முதல்வன் படத்தின் 2ம் பாகம் எனவும் கடந்த இரண்டு நாட்களாக ஓட்டி வருகிறார்கள். விசாரித்ததில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. விஜய் இப்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து அவரின் 68வது படத்தை வெங்கட்பிரபு இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு அவரின் 69வது படத்தை அட்லியோ அல்லது வேறு இயக்குனரோ இயக்க வாய்ப்பிருக்கிறது. இதைத்தான் ஷங்கர் இயக்கவுள்ளதாக சிலர் கொளுத்தி போட்டுள்ளனர்.

Vijay

Vijay

அதேநேரம், விஜயும், ஷங்கரும் அடிக்கடி தொலைப்பேசி மூலம் பேசிக்கொள்வார்களாம். அப்போது பரஸ்பரம் விசாரித்து கொள்வார்களாம். இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்களுக்கு பின் வேள் பாரி நாவலை படத்தை பிரம்மாண்டமாக எடுக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம். இது பாகுபலி, பொன்னியின் செல்வனை பிட சிறப்பாக வர வேண்டும் என அவர் நினைக்கிறார். இதில் விஜயை நடிக்க வைக்கும் எண்ணமும் ஷங்கருக்கு இருக்கிறது. இதைத்தான் சிலர் ஷங்கரும், விஜயும் இணைவதாக கூறி வருகின்றனர்.

எனவே, ஷங்கர் வேள்பாரியை துவங்கும்போதுதான் அதில் விஜய் நடிப்பாரா என்பது தெரியவரும்.

இதையும் பிடிங்க: ஓ மை டார்லிங்!. ஓ மை லவ்!. படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரை விடாமல் டார்ச்சர் செய்த பிரபலம்!..

Next Story