Cinema History
சந்தானம் கல்யாணத்துக்கு போகாத சிம்பு!.. ஆனா அதுக்கு பதிலா அவர் செஞ்சதுதான் ஹைலைட்!..
தனது அப்பா டி.ராஜேந்தரால் சினிமாவுக்கு வந்தவர் சிம்பு. அப்பாவை போலவே சில புதிய கலைஞர்களை சிம்பு சினிமாவில் அறிமுகம் செய்திருக்கிறார். அது பலருக்கும் தெரியாது. நடிகர் சந்தானத்திற்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்ததே சிம்புதான். விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்து கொண்டிருந்தார் சந்தானம்.
ஒரு ஹிட் படத்தை உல்ட்டா செய்து கலாய்த்து எடுப்பதுதான் அந்த நிகழ்ச்சி. ரசிகர்களிடம் இதற்கு பெரிய வரவேற்பு இருந்தது. நடிகர் சிம்புவும் அந்த ரசிகர்களில் ஒருவர்தான். அப்படி லொள்ளு சபா நிகழ்ச்சியை பார்க்கும்போது சந்தானத்திடம் நல்ல டைமிங் சென்ஸ் இருப்பதை கண்டுபிடித்தார் சிம்பு.
இதையும் படிங்க: ஆபரேஷன் முடித்தும் கொஞ்சம் கூட ஓய்வெடுக்காமல் பாடி சாதனை படைத்த எஸ்.ஜானகி!..
ஒருபக்கம், தனது கல்யாணத்திற்கு சிம்பு வரவேண்டும் என ஆசைப்பட்டார் சந்தானம். ஆனால், அவரை யார் மூலம் சந்திப்பது என அவருக்கு தெரியவில்லை. அப்போதுதான் அவருக்கு உதவ காதல் சுகுமார் வந்தார். அவர் சந்தானத்தை அழைத்துகொண்டு சிம்புவிடம் போனார். சந்தானத்திடம் பத்திரிக்கை வாங்கிய சிம்பு ‘கண்டிப்பாக உங்கள் திருமணத்திற்கு வருகிறேன்’ என சொன்னார்.
சிம்பு தனது திருமணத்திற்கு வருகிறார் என்பதில் சந்தோஷமான சந்தானம் சிம்புவை வரவேற்பதை போல பேனர், போஸ்டர் எல்லாம் அடித்து திருமண மண்டபத்தின் அருகே ஒட்டியிருந்தார். ஆனால், சிம்பு சிங்கப்பூர் சென்றுவிட்டதால் சந்தானம் திருமணத்திற்கு செல்லவில்லை. இதனால் சந்தானம் ஏமாந்து போனார்.
இதையும் படிங்க: வாரிசை ஜெயிக்க வைக்க முடியாமல் தோத்துப்போன பிரபலங்கள்!.. சொல்லி அடித்த கில்லி விஜய்!..
அதோடு, ‘உன் கல்யாணத்துக்கெல்லாம் சிம்பு வருவாரா?.. நீ என்ன பெரிய நடிகனா?’ என நண்பர்களும், உறவினர்களும் சந்தானத்தை கலாய்த்தனர். இதனால் அப்செட் ஆனார் சந்தானம். இந்த விஷயத்தை காதல் சுகுமார் போனில் சிம்புவிடம் சொல்ல ‘உடனே சந்தானத்தை அழைத்துக்கொண்டு என் வீட்டுக்கு வா’ என சிம்பு சொல்லி இருக்கிறார்.
சந்தானத்திடம் ‘நான் உங்கள் காமெடிக்கு ரசிகன். என்னால் திருமணத்திற்கு வரமுடியவில்லை. ஆனால், உங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுக்கிறேன்’ என வாக்குறுதி கொடுத்தார். அப்பா இயக்கிய ‘காதல் அழிவதில்லை’ மற்றும் தன்னுடைய ‘மன்மதன்’ படங்களில் சந்தானத்தை நடிக்க வைத்தார். அதன்பின்னரே சந்தானம் கொஞ்சம் கொஞ்சமாக நடித்து காமெடியனாக வலம் வந்து இப்போது ஹீரோவாகவும் மாறியிருக்கிறார்.