சல்மான்கானை பாம்பு கடித்தது எப்படி?... முழு விபரம் இதோ!...

by சிவா |
salman khan
X

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சல்மான்கான். இவரை நேற்று பாம்பு ஒன்று கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பாலிவுட் சினிமா வட்டாரத்திற்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

சல்மான்கானுக்கு மும்பைக்கு வெளியில் பன்வெல் என்கிற இடத்தில் ஒரு பண்ணை வீடு இருக்கிறது. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அவர் அங்குதான் நேரத்தை செலவழிப்பார். அங்கு அவர் விவசாயமும் செய்து வருகிறார். நண்பர்களை அழைத்து பேசுவது, விருந்து கொடுப்பது போன்ற விஷயங்கள் அங்கு அடிக்கடி நடக்கும். மேலும், தனது பிறந்தநாள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளையும் அவர் அங்குதான் கொண்டாடுவார்.

salman khan

இன்று (டிசம்பர் 17) அவரின் பிறந்தநாள் ஆகு,. எனவே, இதைக்கொண்டாட அவர் கடந்த சனிக்கிழமையே அங்கு சென்றுவிட்டார். நேற்று புல்வெளியில் அவர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது அவரை பாம்பு ஒன்று கடித்துவிட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள காமோட்டே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த பாம்பு கடித்ததால் சல்மான்கான் உடலில் விஷம் எதுவும் ஏறவில்லை. எனவே, அது விஷமில்லாத பாம்பு எனக் கூறப்படுகிறது.

salman khan

எனவே, முதலுதவி செய்து மருத்துவர்கள் அவரை அனுப்பிவிட்டனர். தற்போது அவர் பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இன்று பிறந்தநாளுக்கு முக்கிய நண்பர்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

எனவே, பார்ட்டி நடக்குமா என்பது தெரியவில்லை!.

Next Story