கதையும் பிடிக்கல.. இயக்குனரும் பிடிக்கல..! – விஜயகாந்த் அரை மனதோடு நடித்து ஹிட் அடித்த திரைப்படம்…

Published on: April 26, 2023
---Advertisement---

தமிழ் சினிமாவிலேயே ஒரு வருடத்தில் கதாநாயகனாக அதிக படம் நடித்த நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் விஜயகாந்த். இவர் ஒரே வருடத்தில் அதிகபட்சமாக 18 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

விஜயகாந்த் மிகவும் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் அவரது அதிக படங்களை தயாரித்தவர் இப்ராஹிம் ராவுத்தர். இப்ராஹிம் ராவுத்தர் தயாரிப்பதால் அவருக்கு பிடித்த கதைகளில் கூட அப்போது விஜயகாந்த் நடித்து வந்தார்.

vijayakanth
vijayakanth

இதனால் சில சமயங்களில் விஜயகாந்திற்கும் இப்ராஹிம் ராவுத்தருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. இந்த நிலையில் இப்ராஹிம் ராவுத்தர், அவரே ஒரு புது கதையை எழுதினார். அந்த கதை விஜயகாந்திற்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.

அறிமுகமான புது இயக்குனர்:

அந்தக் கதையை திரைப்படமாக்குவதற்கு ஒரு புதுமுக இயக்குனரை அழைத்து வந்தார். இது விஜயகாந்திற்கு மிகவும் நெருடலான ஒரு விஷயமாக இருந்தது. கதையும் பிடித்தார் போல இல்லை, இயக்குனரும் புதிய ஆளாக இருக்கிறார் இந்த படம் வெற்றி அடையுமா? என்கிற சந்தேகம் அவருக்கு இருந்தது.

இருந்தாலும் இப்ராஹிம் ராவுத்தருக்காக அந்த படத்தை நடிக்க ஒப்புக்கொண்டார் விஜயகாந்த். 1990 ஆம் ஆண்டு புலன்விசாரணை என்ற அந்த திரைப்படம் வெளியானது வெளியான பிறகு அவர்கள் எதிர்பார்த்ததை விடவும் பெரிய ஹிட் கொடுத்தது புலன் விசாரணை. புலன் விசாரணை திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிறகு பெரும் இயக்குனரான ஆர்.கே செல்வமணிதான்.

அப்போது புது முக இயக்குனராக இருந்தாலும் அவரின் முதல் படமே பெரும் ஹிட் கொடுத்தது. அந்தப் படத்திற்கு பிறகு தொடர்ந்து விஜயகாந்தை வைத்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார் ஆர்.கே செல்வமணி

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.