எம்.ஜி.ஆர் நடித்து 1954ம் வருடம் வெளியான திரைப்படம் மலைக்கள்ளன். எஸ்.என்.ஸ்ரீமுலு நாயுடு என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பானுமதி நடித்திருந்தார். இப்படத்தி கருணாநிதி திரைக்கதை அமைத்திருந்தார்.
இந்த படத்தின் ஒரு பாடலுக்காக இப்படத்தின் இசையமைப்பாளர் நாராயண சுப்பையா இசையமைத்துக்கொண்டிருந்தார். அருகில் ஸ்ரீமுலு நாயுடு இருந்தார். அந்த ட்யூனுக்கு பாடல் எழுத தஞ்சை ராமையா தாஸ் என்கிற பாடலாசிரியர் வந்திருந்தார். டியூனுக்கு ஏற்றார்போல் பல்லவி எழுதினார். அவர் மேற்கொண்டு எழுதுவதற்கு முன் ராமையா தாஸுக்கும், இயக்குனர் ஸ்ரீமுலு நாயுடுவுக்கும் இடையே சண்டை வந்துவிட்டது. சண்டை முற்றி இனிமேல் இந்த பாடலை நான் எழுத மாட்டேன் என ராமையா தாஸ் சொல்லிவிட்டார்.
அப்போது அங்கே எம்.ஜி.ஆர் வந்தார். நடந்த விஷயத்தை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் பல்லவியை படித்து பார்த்தார். ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்று இருந்தது. இந்த வரி எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப்போனது. எனவே, ராமையாவை சமாதானம் செய்து தொடர்ந்து எழுத சொன்னார்.
ஆனால், அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். எனவே, அந்த பல்லவியை நான் பயன்படுத்திக்கொள்கிறேன் எனக்கூறி அவரிடம் சம்மதம் வாங்கினார் எம்.ஜி.ஆர். அவரும் ஒத்துக்கொண்டார். எனவே கோவை அய்யா முத்து என்பவர் மீதி வரிகளை எழுதி உருவான பாடல்தான் காலத்தால் அழிக்க முடியாத ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ பாடலாகும்.
தமிழ் சினிமாவில்…
ஏஆர்.ரகுமான், சாய்ரா…
பிக்பாஸ் வீட்டில்…
Nepotism: பாலிவுட்டில்…
மழை வருவதற்கு…