விக்ரம்ல விஜய்சேதுபதி வில்லனே இல்லையாம்.. கடைசி நேரத்தில் நடந்த டிவிஸ்ட்..
ஒரு கதையில் எந்த விஷயம் எப்படி மாறும் என யாராலும் கணிக்க முடியாது. ஒரு இயக்குனர் ஒன்றை மனதில் வைத்து எழுதுவார். ஆனால், கதை அதுவாக ஒன்றை மாற்றிவிடும். அதேபோல், ஒரு கதை தனக்காக கதாநாயகனை அதுவாகவே தேடிக்கொள்ளும் எனவும் திரையுலகில் சொல்வார்கள். இயக்குனரே நினைத்து பார்க்காத விஷயம் கதையின் போக்கையே மாற்றிவிடும்.
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து தற்போது பல்வேறு கதாபாத்திரங்களில் கலக்கி ஒரு பிஸியான நடிகராக மாறியிருப்பவர் விஜய் சேதுபதி. கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம், காமெடி என எல்லா வேடங்களிலும் அசத்தி வரும் நடிகராக விஜய்சேதுபதி மாறியுள்ளார்.
ஒருபக்கம் மாநாடு படம் மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் என அதிரடி காட்டி வருகிறார். தற்போது விஜயை வைத்து ‘லியோ’ என்கிற கேங்ஸ்டர் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
லோகேஷின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். விஜயின் வேடத்தை விட அவரின் கதாபாத்திரம் நன்றாக இருந்ததாகவும், அவரால்தான் படமே ஓடியது என்றும் ரசிகர்கள் பலரும் பேசினர். அந்த அளவுக்கு அவரின் வேடம் மாஸ்டர் படத்தில் அழுத்தமாக அமைக்கப்பட்டிருந்தது.
அதன்பின் விக்ரம் படத்தின் கதையை எழுதும்போதும் ஒரு வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என லோகேஷ் முடிவெடுத்துவிட்டாராம். இதற்கு ‘ மாஸ்டர் படத்தில்தான் வில்லன். இந்த படத்தில் எனக்கு வேற எதாவது புதுசா எழுது’ என லோகேஷிடம் விஜய்சேதுபதி சொல்லியிருக்கிறார். ஆனால், நடந்ததே வேறு.
இதுபற்றி ஒரு பேட்டியில் கூறிய லோகேஷ் ‘விஜய் சேதுபதி அண்ணனுக்கு வேறு எதாவது எழுத வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், கமல் சாருக்கு இணையான வில்லன் வேடத்தை தாங்கும் நடிகருக்கு அவரை தவிர வேறு யாரையும் என்னால் யோசிக்க முடியவில்லை. ஒருநாள் அவரை தொடர்பு கொண்டு சந்திக்க வேண்டும் என்றார். என்னை பார்த்ததும் அவர் சிரித்தார். நான் வில்லன் என சொன்னதும் ‘அதனால்தான் சிரித்தேன். நீ இங்குதான் வருவேன்னு எனக்கு தெரியும். நான் கண்டிப்பாக நடிக்கிறேன்’ என சொன்னாராம்.
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி அசத்தலான வில்லனாக கலக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இது என்னுடைய கதை… விஜய் ஆண்டனி மீது குற்றச்சாட்டு வைத்த நபர்… மீண்டும் மீண்டுமா??