இந்திய சினிமாவே அலறப்போகுது!... விஜய் - வெற்றிமாறன் இணையும் படத்தின் கதை இதுதானாம்!...
தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என கவனிக்கத்தக்க சிறந்த திரைப்படங்களை இயக்கி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் வெற்றிமாறன். இவர் இயக்கும் திரைப்படங்கள் விருதுகளை குவிக்கும். அசுரன் படத்திற்கு தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். வெற்றிமாறனுக்கும் விருது கிடைத்தது.
தற்போது சூரி – விஜய் சேதுபதியை வைத்து ‘விடுதலை’ படத்தை அவர் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பின் அவர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதேபோல், விஜயும் – வெற்றிமாறனும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர். இப்படம் விவசாயம் தொடர்பான கதை எனக்கூறப்படுகிறது. இப்படத்திற்காக வெற்றிமாறனுக்கு ரூ.25 கோடி சம்பளமும் பேசப்பட்டுள்ளதாம்.
இந்நிலையில், இப்படத்தின் கதை பற்றிய தகவல் வெளியே கசிந்துள்ளது. நாடெங்கும் கடன் தொல்லை தாங்காமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை அடிப்படையாக வைத்து 'Shoes of the dead' என்கிற நாவலை கோட்டா நீலிமா என்பவர் எழுதியுள்ளார். இதில், விவசாயி ஒருவர் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்வார்.
அவரின் மனைவிக்கு இழைப்பீடு கூட கிடைக்காது. இதைத்தான் விஜயை வைத்து வெற்றிமாறன் எடுக்கவுள்ளாராம். இந்த திரைப்படம் வெளியே வந்தால் இந்திய சினிமா அலறும் என திரை வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை முடித்தபின் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு பின்னரே அவர் வெற்றிமாறன் படத்தில் நடிக்கவுள்ளார்.