நான் அங்க வரமாட்டேன்!.. நீங்க இங்க வாங்க!.. விஜய் பேட்டிக்கு பின்னால் நடந்த ஸ்டோரி!…

Published on: February 1, 2026
vijay
---Advertisement---

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தபின் அரசியல்ரீதியாக இதுவரை எந்த பேட்டியும் கொடுத்ததில்லை.. செய்தியாளர்களை அவர் சந்திப்பதே இல்லை. எதற்கும் வாய் திறந்து பேசாமல் அமைதியாகவே இருக்கிறார்.. அதைத்தான் தனது அரசியல் என்று அவரும் நம்பிக் கொண்டிருக்கிறார்.. இந்நிலையில்தான் வட மாநில தொலைக்காட்சியான NDTV -யில் விஜய் பேட்டி கொடுத்தார் என நேற்று காலை முதலே செய்திகள் வெளியானது.. வெளியான பின்னர்தான் விஜய் பேட்டி கொடுத்தார் என்பதே எல்லோருக்கும் தெரியவந்திருக்கிறது. உலக வரலாற்றில் இப்படி ஒரு ரகசிய பேட்டியை இதுவரை யாரும் கொடுத்ததில்லை.

விஜய் இப்படி சொன்னார் அப்படி சொன்னார் என்றெல்லாம் பல தொலைக்காட்சி செய்திகளிலும் ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது ndtv தொலைக்காட்சி விஜயிடம் பேசியதை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டது. இதையடுத்து ‘உலக வரலாற்றிலேயே கேமரா இல்லாமல் ஒரு பேட்டி கொடுத்து அரசியல் தலைவர் விஜய்தான்.. அதுவும் பேட்டி கொடுத்தவர் என்ன சொன்னார் என்பதை பேட்டி எடுத்தவரிடம் பேட்டி எடுத்து போட்டிருக்கிறார்கள்.. இது செம காமெடி’ என்றெல்லாம் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்..

சென்னையில் NDTV நிறுவனம் சார்பாக 2 நாட்கள் நடைபெற்ற தமிழ்நாடு உச்சி மாநாட்டில் முதல்நாள் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள, அடுத்த நாள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தவெக முக்கிய நிர்வாகிகள் என பல கட்சிகளில் இருந்தும் அதில் கலந்து கொண்டார்கள்.. அவர்களிடம் பல முக்கியமான கேள்விகளும், விமர்சனங்களும் வைக்கப்பட்டது. அதற்கெல்லாம் அவர்கள் பதில் சொன்னார்கள்.. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விஜய்க்கு அழைப்பு போனது.. ஆனால் விஜய் அதில் கலந்து கொள்ளவில்லை..

vijay

‘நான் அங்கெல்லாம் வரமாட்டேன்.. என் ஆபிசுக்கு நீங்க வாங்க’ என சொல்லி NDTV பத்திரிகையாளர்கள் 4 பேரை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பேசியிருக்கிறார் விஜய்.. இதைத்தான் பேட்டி என எடுத்து போட்டிருக்கிறார்கள்..

உண்மையில் விஜயிடம் ‘உங்கள் கட்சியின் கொள்கை என்ன?.. திமுகவை இவ்வளவு கடுமையாக விமர்சிக்க உங்களிடம் இருக்கும் கோபம் என்ன?.. ஒரு மாநாட்டில் பேசிவிட்டு 2 மாதங்கள் சைலண்ட் மோடுக்கு போய்விடுவது ஏன்?.. கரூர் சம்பவம் நடந்த போது நீங்கள் அங்குதானே இருந்திருக்க வேண்டும். ஏன் வேகமாக சென்னை திரும்பினீர்கள்?.. உங்களை சுற்றி இருப்பவர் என்ன சொன்னாலும் கட்சியின் தலைவராக நீங்கள்தானே எல்லா முடிவுகளையும் எடுக்க வேண்டும்.. இதை ஒப்புக்கொள்கிறீர்களா?…

அதிமுக ஊழல் கட்சி என்றால் அங்கிருந்து வந்த செங்கோட்டையன் எப்படி நல்லவர் ஆனார்?.. எப்போதும் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?.. இப்படி இருப்பது ஒரு நடிகனாக ஓகே. ஆனால், அரசியல் என்றால் பேசித்தானே ஆக வேண்டும்.. எல்லா கட்சிகளையும் விமர்சிப்பதுதானே அரசியல்.. களத்தில் இருப்பவர்கள் பற்றி மட்டுமே பேசுவேன் என சொல்வது என்ன மாதிரியான அரசியல்?..

vijay

நீங்கள் ஏன் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட NDTV மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.. உங்களுக்கு அதில் என்ன தயக்கம்?.. பொதுவெளியில் கேள்விகளை எதிர்கொள்ள பயப்படுவது அரசியலுக்கு செட் ஆகுமா?…செய்தியாளர்களை சந்திக்க பயப்படுவது ஏன்?.. அரசியல்வாதி ஆன பின்னரும் ஏன் தொலைக்காட்சியில் அரசியல் தொடர்பான பேட்டிகளை கொடுப்பதில்லை?.. வீட்டிலிருந்தே அரசியலில் வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கிறீர்களா?.. களத்தில் இறங்கி எப்போது வேலை செய்வீர்கள்?..

உங்கள் மீது மற்ற கட்சிகள் வைக்கும் விமர்சனங்களுக்கு உங்கள் பதில் என்ன?.. அரசியலுக்கு வந்தவுடனேயே முதல்வராக வேண்டும் என ஆசைப்படுவது ஏன்?.. திமுகவை தோற்கடிக்க வேண்டும் என நினைக்கும் நீங்கள் ஏன் அதிமுக – பாஜக கூட்டணியில் இணையவில்லை?.. தனித்து போட்டியிட்டால் அது திமுகவிற்கு சாதகமாகத்தானே முடியும்?.. இது போன்ற கேள்விகளைத்தானே அந்த பத்திரிக்கையாளர்கள் கேட்டிருக்க வேண்டும்.

ஆனால், இதையெல்லாம் கேட்காமல் ஒரு அறையில் அமர்ந்து அவரிடம் பேசிவிட்டு அதை ’விஜயுடன் முதல் பேட்டி’ என சீன் போட்டிருக்கிறது என்.டி.டிவி…