இது என்னுடைய கதை… விஜய் ஆண்டனி மீது குற்றச்சாட்டு வைத்த நபர்… மீண்டும் மீண்டுமா??
கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த “பிச்சைக்காரன்” திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு “பிச்சைக்காரன் 2” திரைப்படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது.
அதன்படி “பிச்சைக்காரன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் படப்பிடிப்பில் விஜய் ஆண்டனிக்கு விபத்து நேர்ந்ததாக வெளிவந்த செய்தி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு விஜய் ஆண்டனி மீண்டு வந்தார்.
“பிச்சைக்காரன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் அட்டகாசமான ஸ்னீக் பீக் டிரைலர் வெளிவந்தது. அந்த டிரைலரை பார்க்கும்போது, இத்திரைப்படம் மூளை மாற்று அறுவை சிகிச்சையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், தனது வீடியோ ஒன்றில் “பிச்சைக்காரன் 2” கதை தன்னுடைய கதை என்று ஒருவர் குற்றம் சாட்டியுள்ளதாக ஒரு தகவலை கூறியுள்ளார்.
அதாவது “பிச்சைக்காரன் 2” திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்த அடுத்த நாளே சிங்கப்பூரில் இருந்து ரிஷி கபூர் என்ற நபர் ஒருவர் அந்தணனுக்கு தொடர்புக்கொண்டாராம். “பிச்சைக்காரன் 2 கதை என்னுடைய கதை” என்று கூறினாராம்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தணன், மேலும் விவரங்களை கேட்க, அதற்கு அந்த நபர் “இந்த கதையை நான் தயாரிப்பாளார் எஸ்.ஆர்.பிரபுவிடம் கூறினேன். அவர் இந்த கதை கற்பனைக்கும் எட்டாத ஒன்று, ஆதலால் இதனை தயாரிக்க முடியாது என கூறிவிட்டார். அதன் பின் இந்த கதையை விஷாலிடம் கூறினேன்.
விஷாலும் இதில் நடிப்பதாக ஒப்புக்கொண்டார். விஷாலின் தந்தைக்கும் இந்த கதை பிடித்துப்போய்விட்டது. மேலும் ஸ்கிரிப்ட்டில் பல மாறுதல்களையும் அவர் கூறினார். பிச்சைக்காரன் 2 ஸ்னீக் பீக்கை பார்த்தவுடனே நான் விஷாலின் தந்தைக்கு தொடர்புகொண்டு விஷயத்தை கூறினேன்” என அந்தணனிடம் அவர் கூறினாராம்.
மேலும் தனக்கு பணம் எதுவும் வேண்டாம், இந்த படத்தில் கிரெடிட் கொடுத்தாலே போதும் எனவும் கூறினாராம். அதே போல் இந்த கதை எப்படி விஜய் ஆண்டனி கைக்குப்போனது என்பது குறித்தும் அவருக்குத் தெரியவில்லையாம். ரிஷி கபூர் இதற்கு முன் லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவராம். அந்தணன் இவ்வாறு பகிர்ந்துகொண்ட தகவலால் தற்போது திரை உலகில் சர்ச்சை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் இருந்த மேடையிலேயே அவரை கடுமையாக விமர்சித்த மகேந்திரன்.. புரட்சித்தலைவர் என்ன செய்தார் தெரியுமா?…