Cinema News
ரெட்டத்தலயாக மாறும் சிம்பு.. மாஸான வரலாற்று சம்பவம் இருக்கு.. கசிந்த லேட்டஸ்ட் அப்டேட்!
Published on
By
மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு சமீபத்தில் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன ‘மஃப்ட்டி’ படத்தின் ரீமேக்காக ‘பத்து தல’ படம் உருவானது.
இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்த இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிந்தார்.
கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் கனிசமான வரவேற்பைப் பெற்றது.
சிம்பு அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தினை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தினை இயக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரலாற்று பிண்ணனியில் உருவாக உள்ளது. இதற்காக தற்போது லண்டனில் சிம்பு தங்கியிருந்து மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொண்டு வருகிறார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
2020 ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை தொடர்ந்து 3 வருடங்கள் கழித்து தேசிங்கு பெரியசாமி இந்த படத்தினை இயக்க உள்ளார்.
AR Rahman: மலையாளத்தில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்த ஆர்.கே.சேகர் என்பவரின் மகன்தான் ரஹ்மான். இவருக்கு அப்பா வைத்த பெயர் திலீப். அப்பா...
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அக்டோபர் 5ம் தேதி...
Raththam Movie: தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக தனக்கென தனி பாணியில் மிரட்டி வருகிறார் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக தனது கெரியரை...
Thalapathy 68 : விஜயின் நடிப்பில் வரும் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் அனிருத்...
Rajini 170: ரஜினியின் நடிப்பில் த.ச. ஞானவேல் இயக்கத்தில் தலைவர்170 படத்திற்கான படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியிருக்கிறது. அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள...