சிம்பு, திரிஷா திருமணம் செய்யாததற்கு இது தான் காரணமா? அடக்கடவுளே...
குறும்பான கேள்விக்கு குறும்பாலே பதில் சொன்னால் எப்படி இருக்கும்? சுவாரசியம் குறையாமல் இருக்கும் அல்லவவா. அப்படி ஒரு கேள்வி பதில் தான் இங்கு நாம் பார்க்க இருப்பது. வாங்க என்னன்னு பார்க்கலாம்.
சினிமாவில் இன்று ரசிகர்கள் என்னென்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். கையடக்க கணினியாகவே ஆண்ட்ராய்டு மொபைல் மாறிப்போனது தான் இதற்குக் காரணம். அன்றாட நிகழ்வுகளை விரல்நுனியில் வைத்து தெரிந்து கொள்கிறார்கள்.
Also read: வசூலை அள்ளும் வாழை, டிமான்ட்டி காலனி 2.... 4 நாள் வசூல் இவ்வளவு கோடியா?....
40வயதை நெருங்கிய திரிஷா இன்னும் ஏன் திருமணம் செய்யவில்லை என்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் ஒரு கருத்தைத் தெரிவித்து இருந்தார். அதில் திரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்றும் அவர்கள் அப்போது மோதிரங்களை மாற்றிக் கொண்டதாகவும் கூறினார்.
ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றார். அது மட்டுமல்லாமல் தெலுங்கு நடிகர் ராணாவுடனும் திரிஷாவுக்குக் காதல் என்றார். லிவிங் டுகெதராகவும் வாழ்ந்து வந்தனர். ஆனால் அதுவும் தோல்வி அடைய இருவரும் பிரிந்தனர் என்றார். அடுத்ததாக சிம்புவின் காதல் வலையில் திரிஷா சிக்கி மீண்டு வந்ததாக கூறினார். அந்த வகையில் திரிஷாவுக்குப் பார்த்த மாப்பிள்ளைகள் யாரையும் பிடிக்காதது தான் காரணம் என்றார்.
இந்த நிலையில் மேற்கண்ட நிகழ்வுகளை மனதில் வைத்து இருந்தாரோ என்னவோ, எஸ்டிஆர், திரிஷா இன்னும் திருமணம் செய்யாம இருக்காங்களே ஏன் என வாசகர் ஒருவர் குறும்புத்தனமாக ஒரு கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சொன்ன பதிலும் குறும்பாகவே இருந்தது. என்னன்னு பார்க்கலாமா...
சிம்புவுக்கு சரியான மணமகள் அமையல. திரிஷாவுக்கு சரியான மணமகன் அமையல. இரண்டும் அமைஞ்சதுன்னா உடனடியாக திருமணம் செய்து கொள்ள அவர்கள் இருவருமே தயாராக இருக்காங்க என்று பதில் அளித்தார்.
சிம்புவும், திரிஷாவும் கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற படத்தில் காதலில் கசிந்துருகி நடித்து இருந்தனர். அந்தப் படத்தில் இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் அது என்பது குறிப்பிடத்தக்கது.