Connect with us

ரத்த கசிவு., மேல் சிகிச்சைக்காக வெளிநாடு கூட்டி செல்கிறோம்.! – அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்திய சிம்பு.!

Cinema News

ரத்த கசிவு., மேல் சிகிச்சைக்காக வெளிநாடு கூட்டி செல்கிறோம்.! – அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்திய சிம்பு.!

80’sகளில் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த் என ஜாம்பவான்கள் ஆண்டுகொண்டிருந்த காலகட்டத்தில் தனி ஆளாக, நடிப்பு, கதை , திரைக்கதை, இயக்கம், வசனம், ஒளிப்பதிவு, தயாரிப்பு இசை என அனைத்திலும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தவர் டி.ராஜேந்தர்.

 

இவருக்கு சில நாட்கள் முன்பு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேல் சிகிச்சைக்காக வெளிநாடு கூட்டி செல்ல உள்ளனர் என்கிற செய்தி நேற்று முதல்  இணையத்தில் உலா வந்தது.

தற்போது டி.ராஜேந்தர் மகன் சிலம்பரசன் அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளார். அதில், ‘எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும்.

இதையும் படியுங்களேன் – ரஜினியை பார்க்க வீடு தேடி சென்ற இசைஞானி இளையராஜா.! ஓ இதுதான் விஷயமா.?!

மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி’ என இணையத்தில் உலாவிய பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

மீண்டும்  புது தெம்புடன் பழைய சுறுசுறுப்பான டி.ராஜேந்தராக திரும்பி வர வேண்டும் என அவரது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவில் பலரும் இறைவனை வேண்டி வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top