கமல் மகளுக்கே இப்படியொரு நிலைமையா!.. பப்ளிக்கில் ஸ்ருதிஹாசனிடம் அத்துமீறிய ரசிகர்.. என்ன ஆச்சு?

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் மும்பைக்கு சென்றிருந்து ஸ்ருதிஹாசனை ரசிகர் ஒருவர் பின்தொடர்ந்து பயமுறுத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சூர்யாவின் 7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னதாகவே பாலிவுட்டில் லக்கி என்னும் திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் அறிமுகமாகி இருந்தார். ஆனால் தந்தையைப் போலவே ஸ்ருதிஹாசனால் பாலிவுட்டில் தொடர்ந்து முன்னணி நடிகையாக பயணிக்க முடியவில்லை.

இதையும் படிங்க: பிரபல இயக்குனரை கல்யாணம் செய்தாரா சாய் பல்லவி?… வைரலாகும் புகைப்படம்… அடேய்களா!

கோலிவுட்டிலும் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். தற்போது அதிக அளவில் தெலுங்கு படங்களில் வயதான ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான வீர சிம்மா ரெட்டி மற்றும் வால்டர் வீரய்யா படத்தில் நடித்திருந்தார். பிரபாஸுக்கு ஜோடியாக சலார் படத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன் அந்த படத்தின் ரிலீஸுக்காக இந்த நாட்களாக காத்திருக்கிறார்.

இதையும் படிங்க: லோகேஷ் வச்சா ஒன்னு… மூணை காட்டி மொத்தமாக சுருட்டிய ஆதிக்… என்னங்க பாஸ் இப்படி இறங்கிட்டீங்க?

இந்நிலையில், பொது இடத்தில் நடிகர் சுருதிஹாசன் வந்துகொண்டிருந்தபோது அவரை அப்படியே ஒரு ரசிகர் பின் தொடர்ந்து அந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த ரசிகரை பார்த்து பயந்தே போய்விட்டார் ஸ்ருதிஹாசன். ஒரு கட்டத்தில் கடுப்பாகி உனக்கு என்னதான் வேண்டும் என சொல்ல அந்த ரசிகர் அப்படியே சிரித்து விட்டு கிளம்பி விட்டார். அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

ஸ்ருதிஹாசனுக்கே பொது இடத்தில் இப்படி ஈவ் டீசிங் போன்ற பிரச்சனைகள் வருகிறதே சாதாரண பெண்களுக்கு எந்தளவுக்கு தொல்லை கொடுப்பார்கள் என கடும் கண்டனங்களும் குவிந்து வருகின்றன.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் பண்ணுங்க..

https://www.instagram.com/reel/CxUsYPpPSo6/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

 

Related Articles

Next Story