ரஜினிக்கு நடந்த அமானுஷ்யம்… கனவா? நினைவா?... கேட்கவே அதிர்ச்சியா இருக்கே!!

Baba
கடந்த 2002 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, நம்பியார் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “பாபா”. இத்திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ரஜினிகாந்த் இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதி தயாரித்தும் இருந்தார்.

Baba
தனது சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படமாக “பாபா” திரைப்படம் அமைய வேண்டும் என ரஜினிகாந்த் நினைத்தார். ஆனால் துர்திஷ்டவசமாக இத்திரைப்படம் சரியாக ஓடவில்லை. இந்த நிலையில் “பாபா” திரைப்படம் உருவாவதற்கு காரணமாக இருந்த ஒரு அமானுஷ்ய நிகழ்வு குறித்து தற்போது பார்க்கலாம்.
“படையப்பா” திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அமெரிக்காவில் இருந்த தனது ஆன்மீக குருவான சச்சிதானந்த சுவாமிகளை பார்க்கச் சென்றிருந்தார் ரஜினிகாந்த். அமெரிக்காவில் ஆசிரமத்தை அடைந்த பிறகு தனது பெட்டியை திறந்துபார்த்த போது அதில் “மகா அவதார் பாபா” குறித்த புத்தகம் ஒன்று இருந்திருக்கிறது.

Mahavatar Babaji
20 வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் வாங்கிய புத்தகம் அது. அதனை அவர் அத்தனை ஆண்டுகளுக்கும் படிக்காமல் வைத்திருந்தாராம். ஆனால் எப்படி அந்த புத்தகம் அவரது பயணப்பெட்டிக்குள் வந்தது என அவருக்கு தெரியாதாம். அவர் அந்த புத்தகத்தை பெட்டிக்குள் எடுத்து வைக்கவில்லை என அவர் உறுதியாக இருந்தார்.
எனினும் அந்த புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினார் ரஜினிகாந்த். அப்போது அந்த புத்தகத்தில் இருந்து ஒரு ஒளி அவர் மேல் வந்து விழுந்ததாம். அதனை பார்த்த நொடியில் அதிர்ச்சியாகி அப்புத்தகத்தை மூடி வைத்துவிட்டாராம் ரஜினிகாந்த். இப்போது என்ன நடந்தது என்று புரியாமல் குழம்பிப் போனாராம். இப்படி எல்லாம் நடக்குமா? என வியந்தாராம்.

Baba
அதற்கு அடுத்த நாள் புத்தகத்தை எடுத்து படித்தபோது அந்த ஒளி வருமா? என ஆவலோடு எதிர்பார்த்தாராம். ஆனால் வரவில்லை. அதன் பின் இரண்டு நாட்களும் அப்புத்தகத்தை படித்துப்பார்த்தார். அப்படியும் ஒளி வரவில்லை.

Baba
ஆனால் “அன்று ஒளி வந்தது கனவு இல்லை, அது நிஜம்தான்” என முடிவு செய்தார் ரஜினிகாந்த். அந்த சம்பவத்தை நினைவில் நிறுத்தி சிந்தித்துக்கொண்டிருந்தபோது “பாபா” திரைப்படத்தின் காட்சிகள் அப்படியே அவரது நினைவுகளில் ஓடியதாம். அந்த காட்சிகளை உடனே எழுதத்தொடங்கினார். அதனை தொடர்ந்துதான் “பாபா” திரைப்படத்தை உருவாக்க முடிவு செய்தாராம் ரஜினிகாந்த்.