Cinema News
நெல்சன் வாழ்க்கையில் இப்படி ஒரு கொடுமையா?.. அடுத்தடுத்து மரண அடி.. சிரிப்புக்கு பின் ஒளிந்திருக்கும் சோகம்..
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நெல்சன். முதல் 2 படங்கள் நல்ல வரவேற்பை பெற்று செம ஹிட்டானது. அடுத்த படமான பீஸ்ட், வசூல் ரீதியாக வெற்றி தான் என்றாலும், இந்த படம் கடுமையான விமர்சனங்களுக்குள்ளானது. அதிலும் குறிப்பாக, இயக்குநர் நெல்சனை சமூக வலைதளங்களில் மிகவும் ட்ரோல் செய்யப்பட்டார். இதனால் ஜெயிலர் படம் நிறுத்தப்படும் என்றெல்லாம் செய்திகள் வந்தன.
ஆனாலும் ரஜினிகாந்த் நெல்சன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறி படத்தை எடுத்து முடித்துவிட்டனர். இயக்குநர் நெல்சன் எல்லா பேட்டிகளிலும், அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும் மிகவும் ஜாலியாக கலாய்த்துக்கொண்டு, சிரித்துக்கொண்டு இருப்பார். ஆனால் அவர் வாழ்க்கையல் பல துன்பங்களை கடந்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளார் என்று பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
படித்து முடித்த பிறகு பல இடங்களில் இயக்குநராக, உதவி இயக்குநராக சேருவதற்கு வேலை தேடி அலைந்து ஓய்ந்த நெல்சன், விஜய் தொலைக்காட்சியில் உதவி ஸ்க்கிரப்ட் ரைட்டர் பணியில் சேர்ந்தார். பின் ஒரே மாதத்தில் புரோகிராம் புரொடியூசராக பதவி உயர்வு பெறுகிறார். அது இது எது உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளின் புரோகிராம் புரொடியூசர் நெல்சன் தான். மேலும் சில படங்களுக்கு ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சிகளை எடுத்து சிறப்பாக நடத்தி கொடுத்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியின் போது, நடிகர் சிம்புவுடன் நெல்சனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது நெல்சனின் திறமையை பார்த்த சிம்பு, எப்படி சந்தானத்திற்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தாரோ, அதே போல நெல்சனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார். வேட்டை மன்னன் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தில் சிம்பு, ஹன்சிகா நடித்தார்கள். கிட்டத்தட்ட முக்கால்வாசி படம் எடுத்து முடித்த பிறகு தயாரிப்பு நிறுவனத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு, படம் பாதியில் நின்றுவிட்டது.
இதனால் நெல்சன் விரக்தியின் உச்சித்திற்கே சென்றுவிட்டார். சினிமாவை பொருத்தவரை, முதல் படம் தோல்வி அடைந்துவிட்டால், அடுத்த வாய்ப்பு கிடைப்பது கடினம். முதல் படம் பாதியில் நின்று விட்டால், அடுத்த வாய்ப்பு கிடைப்பதே சந்தேகம். இதனால் மனமுடைந்த நெல்சனை சிவகார்த்திகேயன் தான் ஆறுதல் கூறி, மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கே அழைத்து வந்துள்ளார்.
அங்கு அவரின் திறமை மீது நம்பிக்கை வைத்து பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியை இயக்க வாய்ப்பு கொடுத்துள்ளனர். அந்த நிகழ்ச்சி எவ்வளவு பெரிய வெற்றி என்பது நம் அனைவருக்குமே தெரியும். கமலஹாசன் கூட இவரை பாராட்டியுள்ளார். அதன் பிறகு தான் கோலமாவு கோகிலா பட வாய்ப்பு கிடைத்து சினிமாவில் இயக்குநரானார் நெல்சன். அதற்கடுத்து டாக்டர் படமும் வெற்றி பெற்றது. ஆனால் பீஸ்ட் படத்திற்காக மிகவும் ட்ரோல் செய்யப்பட்டார். இதனால் மீண்டும் நொந்துபோனார். ஆனால் தற்போது மீண்டும் எழுந்துவிட்டார். இந்த முறை சொதப்பமாட்டார் என்று அனைவரும் நம்புகிறார்கள் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொகுப்பாளினியை அடைய நினைத்த அரசியல்வாதி.. டாட்டா சுமோவிலே முடிக்க திட்டம்.. கதறிய விஜே!