Connect with us
high court

Cinema News

ஓடிடி-ல ரிலீஸ் பண்ணக்கூடாது!.. உயர்நீதிமன்றத்தில் வழக்கு.. அமரன் படத்துக்கு வந்த புது சிக்கல்..

அமரன் திரைப்படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமரன் திரைப்படம்:

சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அமரன். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த  திரைப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

இதையும் படிங்க: அப்பா பெருமைப்படுவாரு!.. மினி கூப்பர் காரை பரிசாக வழங்கி.. பாசமழையை பொழிந்த எஸ்.கே..

மேலும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. படம் வெளியானது முதல் நாளிலிருந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. எந்த ஒரு நெகட்டிவ் விமர்சனங்களும் இல்லாமல் இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது.

amaran

amaran

படத்தின் வசூல்:

அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலிருந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வந்ததால் வசூலிலும் மிகப் பெரிய சாதனை படைத்தது. படம் வெளியான 3 நாட்களிலேயே 100 கோடி வசூல் செய்தது. தொடர்ந்து 6-வது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படம் கிட்டதட்ட 350 கோடியை நெருங்கி இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் இருக்கும் பல டாப் நடிகர்களின் சாதனையை முறியடித்து முன்னணி இடத்தை பிடித்திருக்கின்றது அமரன் திரைப்படம். இதன் மூலமாக சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றார் என்று கூற வேண்டும். மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரது நடிப்பும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

படத்தின் சிக்கல்:

படம் வெளியான சிறிது நாட்களில் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் அடையாளம் மறைக்கப்பட்டு விட்டதாக ஒரு சர்ச்சை எழுந்தது. முகுந்த் வரதராஜன் ஒரு பிராமினர். ஆனால் எந்த இடத்திலும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவர் ஒரு பிராமணர் என்பதை காட்டவில்லை. அவரின் அடையாளம் ஏன் மறைக்கப்பட்டது என்று சமூகவலை பக்கங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.

amaran

amaran

இதற்கு படக்குழுவினர் தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது. இது ஒரு புறம் இருக்க இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஒரு போன் நம்பரை எழுதி கொடுப்பார். அந்த நம்பர் நிஜத்தில் ஒரு பொறியியல் மாணவர் செல்போன் எண். இதனால் அவர் மிகப்பெரிய டார்ச்சர் அனுபவித்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

படம் வெளியானது முதலே தன்னால் தூங்கவோ படிக்கவோ வேலை செய்யவோ முடியவில்லை என்று கூறி பட நிறுவனத்திடம் 1.10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்நிலையில் அமரன் திரைப்படம் நாளை ஓடிடியில் ரிலீஸ்-ஆக உள்ள நிலையில் இன்று பொறியியல் மாணவர் வாகீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்து இருக்கின்றார்.

இதையும் படிங்க: அப்பா 250 கோடினா புள்ள கால்வாசியாவது வாங்கனும்ல.. ஜேசன் சஞ்சயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அதில் அமரன் திரைப்படத்தில் தன்னுடைய மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்டஈடு கோரி மனு தாக்கல் செய்திருக்கின்றார். ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனமும், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் தனக்கு 1.10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர் கோரிக்கை வைத்திருக்கின்றார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top