கமல் கேள்வி கேட்குறாருன்னா அதுல என்ன தப்பு இருக்கு...? இந்தியன் 2 ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன்

Indian 2
இந்தியன் படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து 26 ஆண்டுகளுக்குப் பின்பும் கூட இந்தியன் 2 படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பிரம்மாண்ட பட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 படம் பிரமாதமாக வளர்ந்து வருகிறது.
இந்தப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் படத்தில் தனது அனுபவங்களைக் குறித்து என்ன சொல்கிறார் என பார்ப்போம்.

Peter Hain
நான் வந்து ரொம்ப புதுசு. என் கம்போசிங் எல்லாம் ரொம்ப சிம்பிளா இருக்கும். கமல்சார நீங்கப் பார்த்தீங்கன்னா குழந்தையில இருந்து நடிச்சிருக்காரு. அவரோட கேரக்டர் நம்ம எல்லாத்துக்கும் தெரியும். நாம எல்லாரும் எங்காவது ஒரு இடத்துல தப்பா செஞ்சிட்டோம்னா அவரு கேள்வி கேட்குறாரு.
அவரு ஆக்டர்ஸ்ல சீனியர். அதுல என்ன தப்பு இருக்கு? ஏன்னா அந்தக் காட்சி சூப்பரா வரணும்கிறதுக்காகத் தான் அவரு கேட்கிறார். இதுவரைக்கும் இந்த வேட்டையாடு விளையாடு படத்துக்கும் எந்தக் குறையும் எங்;கிட்ட சொன்னதில்ல.
அதே மாதிரி இந்த இந்தியன் 2ல கூட சார் எனக்கு வந்து இது வருது...இது வேணும்னு நான் சொன்னாக்கூட ஹி வாஸ் சீனியஸ். ஐயோ நான் எப்படி எல்லாம் ரசிச்சேன் தெரியுமா?
சூட்டிங் ஸ்பாட்ல அப்படி எல்லாம் அவரை ரசிச்சிருக்கேன். அவரு பார்ப்பாரு. அந்த ஃபீலு...அந்தக் கை எடுத்தாக் கூட ஒரு நைன்டீன் இயர்ஸ் ஆளுங்கல்லாம் எடுத்த மாதிரி தான் இருக்கும்.
அவரு என்ன இன்புட் பண்ணாரோ அதை அவருக்கிட்ட இருந்து நான் கத்துக்கறேன். ஃபைட் பண்ணும்போது கூட அந்த மாதிரி மெயின்டைன் பண்ணனும்னு சொல்றாரு. அந்த பர்பார்மன்ஸ நான் அவருக்கிட்ட இருந்து கத்துக்குறேன்.
அது எப்படி அவரு என்னன்ன பண்றாரு...? அந்த பாடி லாங்குவேஜ், இப்ப குதிரை ஷாட்ஸ், இது அதுன்னு என்னம்மல்லாமோ இருக்கு.

Indian 2 fight
சில விஷயம் வந்து ஸ்டண்ட்மேன் பண்ண முடியாது. ஏன்னா அவன் தான் பைக் எல்லாம் நல்லா ஓட்டுவான். குதிரைன்னா நல்ல குதிரை சவாரி செய்வான்.
ஆனா ஃபைட் பண்ணத் தெரியாது. ஆனா அதே நேரத்துல வந்து வெறும் ஃபைட்னா நல்லா பண்ணுவாங்க. குதிரையும் ஓட்டத்தெரியாது. பைக்கும் ஓட்டத்தெரியாது. சில ஷாட்ஸல்லாம் பாருங்க. நானே பண்ண வேண்டியதா தான் இருக்கும்.
ஒரே ஒரு விஷயம் சொல்றேன். இன்னிக்கு எங்க ஃபேமிலி. நானு எல்லாரும் நல்லா இருக்கோம். அது எதுக்காக...? எனக்கு வந்து ஃபேன்ஸ்...இருக்காங்க. அவங்க மூலமாத் தான் நாம வாழுறோம். ஆனா அவங்களுக்கு ரொம்ப மரியாதைக் கொடுக்குறேன்.
அவங்களுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். இதை ஏற்கனவே ஃபரூவ் பண்ணிட்டேன். அவங்களுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். சப்போஸ் ஆக்சிடண்ட்ல இருந்தாக்கூட அவங்களுக்காக நாம பண்ணனும்.

Indian 2
ஒரு மரம் வந்து ஆலமரம் நல்லா அழகா வளர்ந்துருக்கு. அது எங்க இருந்து வந்தது? அது வந்து ஒரு சின்ன சின்ன சாய்ல். அந்த மண்ணு எங்கருந்து வந்தது? அது மூலமாத் தான் அந்த மரம் வளர்ந்துருக்கு. சோ...எனக்கு அந்த மண்ணு வந்து ரொம்ப ரொம்ப முக்கியம். சோ...அதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்.