
Cinema News
பிரியாணி கொடுத்து ஸ்டண்ட் மாஸ்டரைப் பேச வைச்ச ஹீரோக்கள்… பேருல கூட இவ்ளோ ஒற்றுமையா?
அஜித்குமார் எனக்கு எந்தவிதமான பட்டமும் வேண்டாம். ஏகே, அஜீத்குமார்னு கூப்பிட்டா போதும்னு முதல்ல ‘தல’, ‘அல்டிமேட்’னு சொல்ற பட்டங்களை எல்லாம் துறந்து விட்டார். அதனால அவரை ஏகேன்னு தான் இப்ப பலரும் சொல்றாங்க. அவருக்குக் கடைசியாக வெளியான விடாமுயற்சியைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி படம் வெளியாகிறது.
அதே போல அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு மதராஸி படம் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயனை ஷார்ட்டாக ‘எஸ்கே’ன்னு தான் பலரும் சொல்றாங்க. அந்த வகையில் இந்த ஏகேவுக்கும், எஸ்கேவுக்கும் பேருலயே ஒற்றுமை இருக்கு. அதே போல படப்பிடிப்பு நடக்கும்போது இருவரும் பிரியாணி கொடுக்குறதுல கில்லாடிகளாம். இதுகுறித்து பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா என்ன சொல்றாருன்னு பாருங்க.

SK, AK
ரஜினி முருகன் படத்துக்காக ஜூனியர் ஆர்டிஸ்ட் 300லருந்து 400 பேரு சோழவந்தான் பக்கத்துல ஷூட் பண்ணிட்டு இருந்தோம். அப்ப ஒரு நாள் எல்லாருக்கும் இலை போட்டு சிவகார்த்திகேயன் சார் பிரியாணி போட்டாரு. எல்லாரும் ஃபுல்லா சாப்பிட்டு சந்தோஷமா இருந்தோம். அஜீத் சார் எப்படி எல்லாருக்கும் பிரியாணி சமைச்சுக் கொடுப்பாரோ, அதே மாதிரி சிவகார்த்திகேயன் சார் எல்லா செட்லயும் பிரியாணி வாங்கிக் கொடுத்துடுவாரு என்கிறார் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா.
வேதாளம், ரஜினி முருகன், மாரி 2, சாமி 2, மூக்குத்தி அம்மன், மாஸ்டர் என பல சூப்பர்ஹிட் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் ஸ்டண்ட் சில்வா என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் எம்ஜிஆர் சாப்பாட்டு விஷயத்துல தாராளமானவர். அதன்பிறகு விஜயகாந்த் தான் எல்லாருக்கும் ஒரே மாதிரியா எந்தவித பாகுபாடும் இல்லாமல் சூட்டிங் நேரத்துல சாப்பாடு கொடுப்பாருன்னு சொல்வாங்க. அதையே இவர்களும் கடைபிடிக்கிறார்கள் எனத் தெரிகிறது.