Connect with us

Cinema History

விக்ரம் படத்தில் புது அப்டேட் இதோ..! பயில்வான் ரங்கநாதன் சொல்றதைப் பார்த்தா வில்லன் யாருன்னே தெரியாதா?

கமலின் விக்ரம் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. தினமும் இணையதளவாசிகள் இன்றைக்கு ஏதாவது அப்டேட் கிடைக்காதா என தேடிக்கொண்டே இருக்கிறார்கள். படத்தின் கதையும் லீக் ஆகவில்லை. ஒவ்வொருவரும் ஒரு கதையைச் சொல்கிறார்கள்.

நமக்குத் தெரிந்தவரை நாமும் ஒரு குண்டைத் தூக்கிப் போடுவோம் என்று போகிற போக்கில் போட்டு விட்டு செல்கின்றனர். அந்தவகையில் தற்போதைய விக்ரம் படத்திற்கான தகவல்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

விஜய் சேதுபதி ஜெயில்ல இருக்காரு. அவரைக் காப்பாத்துற ஆபரேஷன்ல பகத்பாசில் ஈடுபடுகிறார். அந்த ஆபரேஷனைத் தடுக்கற வேலையை கமல் எப்படி கனக்கச்சிதமாக செய்கிறார் என்பதுதான் கதை. இந்தப்படத்தில் கமல் ரிட்டையர்டு போலீஸாக நடிக்கிறார். அதுமட்டுமில்லாம படத்தில கமல 80ஸ் லுக்கில் இளமை பொங்கும் தோற்றத்தில் காட்டுகிறார்கள்.

kamal;s vikram

டிஜிட்டல் டிஐஜி தொழில்நுட்பத்தில் இந்த காட்சி எடுக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.10 கோடி செலவாகி உள்ளதாம். சூர்யாவின் ஆதவன், ரஜினியின் சிவாஜி படங்களில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாம். ஆனால் கமல் படம் என்றால் அதிலும் புதிய நுட்பம் என்பது இருக்கத்தானே செய்யும். பொறுத்திருந்து பார்ப்போம்…ஜூன் 3 வரை…!

இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்கலாமா…!

கமல் எப்போதுமே புதுமை விரும்பி. எந்த நடிகரும் உலகத்தில் இல்லாத அளவிற்கு 15 வருஷத்திற்கு பின்னால் நடக்க உள்ளதை முன்னாடியே எடுப்பவர். ஏன்னா அறிவின் முதிர்ச்சியாளர் கமல். ராஜபார்வை படத்தை இப்போ பார்த்தா ரொம்ப புதுசா இருக்கும். இதை அப்பவே செய்துவிட்டார் கமல்.

அறிவுப்பூர்வமாக சிந்தித்து மேக் அப்பிலும் அசத்துவார். அவ்வை சண்முகியில் குரலை மட்டும் மாற்றவிவில்லை. மேக் அப் 3 மணி நேரமாச்சு. கமல் என்றால் தனித்துவம். இந்தில 3 படங்கள் ஹிட் கொடுத்தார். அவர் மட்டும் இந்தியில் தொடர்ந்து இருந்தால் நம்பர் 1 ஆகியிருப்பார்.

விக்ரம் படத்திற்காக இயக்குனர் லோN;கஷ்கனகராஜோட முதன்முதலில் ஸ்டோரி டிஸ்கஷனே பிளைட்ல பண்ணினார் கமல்.

kamal, logesh kanagaraj

3 மணி நேர பயணம் முழுவதும் இந்த டிஸ்கஷன் நடந்தது. லோகேஷ் கனகராஜூம் கமலின் சாணக்கியத்தனத்துக்கும், திறமைக்கும் ஈடுகொடுத்து படத்தை இயக்கியுள்ளார் என்பதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஜய் சேதுபதி படத்தின் வில்லனா என்பது கேள்விக்குறி. பகத்பாசில் குணச்சித்திர வேடமா, வில்லனா என கடைசி வரை கண்டுபிடிக்க முடியாது.

கமலுக்கும் என்ன கேரக்டர் என்று இதுவரை உறுதியாக லீக் ஆகவில்லை. கமலும் சில தோல்விகள் சந்தித்து ரொம்பவே நெருக்கடியாக உள்ளார். கமல் எப்பவுமே தான் சம்பாதித்ததை சினிமாவில் தான் முதலீடு செய்வார். அவர் நடித்த 4 படங்கள் பாதியில் நிற்கின்றன. சபாஷ் நாயுடு படம் பாதி முடிந்து நிற்கிறது.

அரசியலும் அவருக்கு இப்போது தோல்வி. அரசியலில் விஜய் அளவுக்கு கூட வரவில்லை. அவருடைய இழுப்பு அரசியல் வராது. சினிமா வரும். ஆனால் அரசியல் அப்படி இல்லை. அவர் இறங்கி வரணும். காட்சிகளில் ஒரு பரபரப்பையும், விறுவிறுப்பையும் கொண்டு வரும் விக்ரம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

vikram

இன்றைக்கு என்ன அமெரிக்காவுல ஹாலிவுட்ல மேக் அப் சாதனம் இருக்கு? என்ன கேமரா இருக்குன்னு அவருக்கு தெரியும். இப்ப இந்த கேமரா லேட்டஸ்டா வந்துருக்குன்னு சொல்வாரு. டிஜிட்டல்ல முதன்முதலா அறிமுகப்படுத்தினதே கமல்ஹாசன் தான்.

அவர் அறிமுகப்படுத்திய டிஜிட்டல் இன்று ஓடிடி லெவலுக்கு வந்துட்டு. நிச்சயமா விக்ரம் தமிழ்சினிமாவை அடுத்தக்கட்டத்துக்குக் கொண்டு செல்லும். பழைய கமல்ஹாசனை சகலகலாவல்லவனை சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நினைவு படுத்தும் விக்ரம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top