Vidamuarchi: விடாமுயற்சி படம் இவ்வளவு லேட்டானதுக்கு இதுதான் காரணமா?!... பிரபலம் சொன்ன சுவாரஸ்யம்!...

by ramya suresh |   ( Updated:2024-11-09 08:49:26  )
Vidamuarchi: விடாமுயற்சி படம் இவ்வளவு லேட்டானதுக்கு இதுதான் காரணமா?!... பிரபலம் சொன்ன சுவாரஸ்யம்!...
X

#image_title

விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமானதற்கு என்ன காரணம் என்பது குறித்து படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கூறியிருக்கின்றார்.

நடிகர் அஜித்: தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். சினிமாவில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் இவர் கடைசியாக துணிவு என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இவர் நடிப்பில் தற்போது வரை எந்த திரைப்படமும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: Vijay Tvk: விஜயை பத்தி யாருக்கும் தெரியாது!. சின்ன வயசுல இருந்தே!.. ஹைப் ஏத்தும் ஷோபா!..

விடாமுயற்சி: துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகின்றார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் ஆரம்பித்த நாள் முதலே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. இதனால் தொடர்ந்து படப்பிடிப்பு தாமதமாகி தாமதமாகி தற்போது தான் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

குட் பேட் அக்லி: விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி விட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. முதல் ஷெட்யூல், இரண்டாம் ஷெட்யூல் என படத்தை வேகமாக எடுப்பது மட்டுமில்லாமல், ரசிகர்களுக்கு அவ்வபோது அப்டேட்டுகளை வெளியிட்டு மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் விடாமுயற்சி அப்டேட் கேட்பதையே நிறுத்திவிட்டார்கள்.

ரிலீஸ் தேதி: அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் கோலிவுட் வட்டாரத்தில் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்றும், குட் பேட் அக்லி திரைப்படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி ரிலீஸ் செய்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

விடாமுயற்சி தாமதம்: விடாமுயற்சி திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வருகின்றது. படத்திலிருந்து வெளியான அஜித்தின் புகைப்படங்களும் ரசிகர்களிடையே எந்தவித வரவேற்பையும் பெறவில்லை. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் தாமதம் தொடர்பான காரணத்தை படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார். அதாவது 'விடாமுயற்சி திரைப்படம் இவ்வளவு தாமதமானதற்கு காரணம் படத்தின் லொகேஷன் தான்.

இதையும் படிங்க: Shrutihaasan: 3 படத்துக்கு அப்புறம் எந்த பட வாய்ப்புமே வரல?!… யாருமே கூப்பிடல!… பீல் பண்ண ஸ்ருதிஹாசன்!…

அஜர்பைசானில் கால சூழ்நிலை என்பது எப்போது எப்படி இருக்கும் என்று தெரியாமல் இருந்தது. திடீரென்று காத்தடிக்கும், திடீரென மழை பெய்யும், 10 நிமிடத்திற்கு ஒருமுறை வெதர் மாறிக்கொண்டே இருந்த காரணத்தால் சரியாக படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. ஒரு நாளில் எடுக்கக்கூடிய கதை என்பதால் கால சூழ்நிலை சரியாக இருக்க வேண்டும். திடீர் திடீரென்று மழை பொழியும்போது, பனிப்பொழியும் போது அந்த கண்டினியூட்டி என்பது மிஸ்ஸாகின்றது. இதனால் காத்திருந்து காத்திருந்து படம் இவ்வளவு தாமதம் ஆகிவிட்டது' என்று கூறி இருக்கின்றார்.

Next Story