Connect with us
subu panchu

Cinema History

நடிகர் சுப்பு பஞ்சு இந்த வேலையெல்லாம் செய்திருக்கிறாரா?!.. யாருக்கும் தெரியாத ரகசியம் இதுதான்!..

கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்தவர் பஞ்சு அருணாச்சலம். இவர் கண்ணதாசனின் உறவினரும் கூட. கண்ணதாசன் சொல்ல சொல்ல பாடல்களை எழுதுவார். ஒரு கட்டத்தில் இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுத துவங்கினார். அதோடு, படங்களை தயாரிக்கவும் துவங்கினார். ரஜினியை ஒரு ஜனரஞ்சக ஹீரோவாக மாற்றியவரே பஞ்சு அருணாச்சலம்தான். இதை ரஜினியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

பஞ்சு அருணாச்சலம் எழுதிய முரட்டுக்காளை திரைப்படம் ரஜினியின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. அதன்பின் பஞ்சு அருணாச்சலத்தின் தயாரிப்பிலும், கதையிலும் ரஜினி பல படங்களில் நடித்திருக்கிறார். அதோடு, சில வருடங்களுக்கு முன்பு பஞ்சு அருணாச்சலத்திற்கு ஒரு வீட்டையும் ரஜினி வாங்கி கொடுத்தார்.

இதையும் படிங்க: குடியும் கும்மாளமாக இருந்த ‘பம்பாய்’ பட நடிகை! அந்த தொழிலால் நாட்டுக்கே பெருமை சேர்ந்த சம்பவம்

பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்பு பஞ்சு. இவரும் தமிழ் சினிமாவில் பல படங்களை தயாரித்தவர்தான். மேலும், பல திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். ஆர்யா, சந்தானம், நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்து சூப்பர் ஹிட் அடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஆர்யாவின் அண்ணனாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். சுந்தர் சி இயக்கத்தில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த ‘கலகலப்பு’ படத்தில் தங்கப்பல் வைத்த வில்லனாக வந்து சிரிக்க வைத்தார். இப்படி பல படங்களில் நடித்தவர் இவர்.

இவர் நடன இயக்குனராகவும் இருந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?.. ஒரு படத்தில் அது நடந்தது. பாலச்சந்தர் தயாரிப்பில் அகத்தியன் இயக்கிய திரைப்படம் விடுகதை. 1997ம் வருடம் இப்படம் வெளியனது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், நீனா, மணிவண்ணன் என பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.

இதையும் படிங்க: கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!.. ஆடையை குறைத்து அதிர வைக்கும் அதிதி ஷங்கர்…

காதல் கோட்டை படத்திற்கு பின் அகத்தியன் இயக்கிய படம் இது. இளம்பெண் ஒருவர் வயதான ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்வார். அதன்பின் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது பெப்சி திரைப்பட தொழிலாளர் சங்கத்தின் வேலை நிறுத்தம் நடந்து கொண்டிருந்தது. எனவே, ஒரு பாடலை எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். ஏனெனில் நடன இயக்குனர்கள் யாரும் எந்த படத்திலும் வேலை செய்யவில்லை. எந்த நடன இயக்குனரும் யாருடைய படத்திலும் வேலை செய்யக்கூடாது என பெப்சி அமைப்பு கூறியிருந்தது.

இதில் கோபமடைந்த பாலச்சந்தர் ‘யாருக்கு தைரியம் இருக்கு?… நான் அவங்களை டேன்ஸ் மாஸ்டர் ஆக்குறேன்’ என சொல்ல பஞ்சு சுப்பு அந்த படத்திற்கு நடனம் அமைத்தாராம். ஆனால், அதன்பின் அவர் எந்த படத்திற்கும் நடனம் அமைக்கவில்லை. விடுதலை படமும் ஒரு தோல்விப்படமாக அமைந்தது.

சுப்பு பஞ்சு டப்பிங் கலைஞராகவும் இருக்கிறார். ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வில்லனாக நடித்த நடிகர் சுமனுக்கு குரல் கொடுத்தவரும் இவர்தான்.

இதையும் படிங்க: பண்டிகைகளுக்கு ராஜா போட்ட மறக்க முடியாத பாடல்கள்!.. பல வருஷமாகியும் இப்பவும் ஹிட்டுதான்!…

google news
Continue Reading

More in Cinema History

To Top