
Cinema News
அஜித் செலக்ட் பண்ண படம் தான் சுப்ரமணியபுரம்.! ஷாக் கொடுத்த இளம் ஹீரோ…
தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடித்த பகவதி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜெய். அதன் பின்னர் சென்னை-28 படத்தின் மூலம் 10 பேரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் ஜெய். அதன் பிறகுதான் சுப்ரமணியபுரம் திரைப்படம் மூலம் அனைவருக்கும் அறியப்பட்ட நடிகராக மாறினார்.
சென்னை 28 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் அஜித்குமார் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள் போன்றோர். ஆதலால், சென்னை 28 படத்தில் நடித்த அத்தனை பேரும் அஜித்திற்கு நெருக்கமான வட்டத்தில் இருந்தனர்.
அப்போது நடிகர் ஜெய் தனக்கு வந்த பட வாய்ப்புகள் பற்றி அஜித்திடம் கூறியுள்ளாராம். அப்போது அதனை பற்றி விசாரித்துள்ளார் அஜித். அதன் பின்னர் நடிகர் ஜெய் தனக்கு வந்த பட வாய்ப்புகளில் முக்கியமான மூன்று வாய்ப்புகளை அஜித்திடம் கொடுத்து செலெக்ட் செய்ய கூறியுள்ளார்.
அந்த மூன்று கதைகளை படித்து பார்த்த அஜீத் தேர்ந்தெடுத்த கதைதான் சுப்ரமணியபுரம். கதை, திரைக்கதை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இந்த கதையை தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும் என்று அஜித் கூறவே, அதனை தேர்ந்தெடுத்தார் ஜெய்.
இதையும் படியுங்களேன் – முன்னாள் கணவர் பற்றிய கிசு கிசு… ஆதங்கத்தை கொட்டி தீர்த்த சமந்தா.!
அஜித் சொன்னதுபோலவே சுப்ரமணியபுரம் திரைப்படம் ஜெய்க்கு பெரிய அளவில் தமிழ் சினிமாவில் கதவை திறந்தது என்பதே உண்மை. அதன்பின்னர் ஒருசில படங்கள் தோல்வி படங்கள் கொடுத்து வந்தாலும், தற்போது வரை ரசிகர்கள் மறக்காமல் இருப்பதற்கு காரணம் சுப்ரமணியபுரம் திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அண்மையில் ஒரு நேர்காணலில் நடிகர் ஜெய் குறிப்பிட்டு இருந்தார். அவர் நடிப்பில் அடுத்ததாக பட்டாம்பூச்சி திரைப்படம் வெளியாக உள்ளது. அதில் வில்லனாக ஜெய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தர் சி ஹீரோவாக நடித்துள்ளார்.