Connect with us

Cinema News

எனக்கு யார் கூடவும் தொடர்பில்லை… சுச்சி லீக்ஸால் என் வாழ்க்கையே போச்சு… கலங்கிய ஹிட் நாயகி…

Anuya: தமிழ் சினிமாவில் ஒரு சில நாயகிகளுக்கு ஒரு படம் கொடுக்கும் புகழ் அவரின் கேரியரில் அழியாத புகழை  பெற்று தரும் அப்படி ஒரு நடிகை தான் அனுயா. ஜீவாவுடன் சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். பின்னர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேறினார்.

அதை தொடர்ந்து அனுயா சில படங்களில் நடித்தாலும் அவருக்கு எஸ்எம்எஸ் படம் கொடுத்த வெற்றியை மற்ற படங்கள் கொடுக்கவே இல்லை. சில காலமாக சினிமாவில் இருந்து விலகி இருக்கும் அனுயா தற்போது சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அனுயா தன்னுடைய சினிமா அனுபவம் கொடுத்து இருக்கும் பேட்டி தற்போது வைரலாக பரவிவருகிறது.

இதையும் படிங்க: நான் இல்லாமலே என் படத்துக்கு இசையா?!.. இளையராஜா – பாலச்சந்தர் பிரிந்த காரணம் இதுதான்!..

அந்த பேட்டியில் இருந்து, எனக்கு வித்தியாசமான கதைகள் வந்தால் சந்தோஷப்படுவேன். கல்யாணம் ஆகாத நானே நிறைய படங்களில் குழந்தைகளுக்கு  அம்மாவாக நடித்து இருக்கேன். எனக்கு நிறைய தொடர்பு இருப்பதாக எழுதி இருந்தனர். ஆனால் எல்லாமே பொய் தான்.

நான் யாருடன் தொடர்பில் இல்லை. சோஷியல் மீடியாக்களில் வருவதை மக்கள் எளிதாக நம்பி விடுகின்றனர். எனக்கு கல்யாணமும் ஆகவில்லை. அதனால் தான் இன்ஸ்டாவை திறந்தேன். அதில் மக்கள் என்னிடம் கேட்கும் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லிவிடலாம்.

என்னை சுற்றி சொல்லப்பட்ட கிசுகிசு, சுச்சி லீக்ஸ் எல்லாமே பொய் தான். அந்த சமயத்தில் அது என்னை ரொம்பவே பாதித்தது. மன அழுத்தத்துக்கு தள்ளப்பட்டேன். ஹீரோயினாக நடித்த நான் வில்லியாக நடிக்கும் நிலைக்கு வந்தது. எனக்கும் பெரிய துணை இல்லை என்பதால் வந்த ரோலை செய்தேன்.

இதையும் படிங்க: ஓவர் பந்தா காட்டி ரஜினி படத்தை இழந்த அனிருத்!.. இதெல்லாம் தேவையா புரோ!..

சுச்சி லீக்ஸ் பிரச்னை வந்த போது யாருடனும் நான் பேசவே இல்லை. வெளிவந்த புகைப்படங்கள் எனக்கு மட்டும் தான் பொய் என்று தெரியும். மார்பிங் செய்யப்படுவது குறித்து எனக்கு தெரியும். மக்களுக்கு அது தெரிய வாய்ப்பிருக்காது. அதனால் தான் இன்ஸ்டாவில் நிறைய புகைப்படங்கள் போடுவேன். இந்திராகாந்தியுடன் நான் இருப்பது போல மார்பிங் புகைப்படத்தினை கூட பகிர்ந்து இருப்பேன்.

நான் பழைய நடிகை என்று விக்கிபிடியாவே சொல்லுகிறது. நான் பழைய நடிகைகள் இல்லை. வாய்ப்பு தான் வரவில்லை. நான் நடிக்க தயாராக இருக்கேன். எனக்கு ஐட்டம் பாடல்களில் நடிக்க வந்த வாய்ப்பை நிறைய முறை தவிர்த்து இருக்கேன். அதுப்போல நண்பன் படத்துக்கு பின்னர் அக்கா ரோல்களை கூட வேண்டாம் என்றேன். அது என் கேரியரை மாற்றிவிடும் என்பதால் மறுத்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: இதே வேட்டையனா இருந்தா நிலைமையே வேற!.. காத்து வாங்கும் லால் சலாம் டிக்கெட் புக்கிங்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top