பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய கேரக்டர்... அப்போ இனி டிஆர்பி அதாள பாதாளத்திற்கு போயிடுமே?

by ராம் சுதன் |   ( Updated:2022-03-12 08:15:59  )
baakiyalakshmi serial
X

ஒரு சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணம் அந்த சீரியலில் மெயின் கேரக்டரில் நடிக்கும் கதாபாத்திரம் தான். அந்த மெயின் கேரக்டர் மாறிவிட்டால் அதன் பின்னர் அந்த சீரியலின் விறுவிறுப்பும் வேகமும் குறைந்து விடும். உதாரணமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து நடிகை ரோஷ்னி விலகிய பின்னர் டிஆர்பியில் பாரதி கண்ணம்மா சீரியல் மிகவும் பின்தங்கி காணப்பட்டது.

தற்போது மற்றுமொரு பிரபல சீரியலுக்கும் அதே நிலை தான் உருவாக உள்ளது. அதன்படி குடும்ப தலைவிகள் கொண்டாடும் பாக்கியலட்சுமி தொடரில் அப்பாவி மனைவியாக மிகவும் வெகுளியாக பாக்கியலட்சுமி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகை சுசித்ரா. இவரின் நடிப்புக்காகவே இந்த சீரியல் பிரபலமாக உள்ளது என்று கூறலாம்.

suchita

suchita

பாசக்கார அம்மா மற்றும் அன்பான மருமகள் அப்பாவி மனைவி என தனது கேரக்டரை அவ்வளவு அற்புதமாக செய்து வரும் நடிகை சுசித்ரா தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அதிரடி திருப்பங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் முக்கிய கேரக்டரான சுசித்ரா விலக உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து நடிகை சுசித்ராவுக்கு பதில் பிரபல நடிகையும் வாணி ராணி சித்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள நடிகை ராதிகா பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராதிகா ஒரு சிறந்த நடிகை தான். இருந்தாலும் சுசித்ரா அளவிற்கு அப்பாவியாக நடிப்பார்களா? ரசிகர்கள் அவரை ஏற்று கெள்வார்களா? என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

Next Story