ஐஸ்வர்யா உனக்கு வேண்டாம்னு தனுஷ்கிட்ட சொன்னேன்!.. இப்படி உடைச்சிட்டாரே சுசித்ரா!..

by சிவா |   ( Updated:2024-09-09 16:00:52  )
aishwarya
X

#image_title

Dhanush: சினிமா நடிகர்கள் தொடர்பான பல ரகசியங்களை போட்டு உடைத்து வருபவர் பாடகி சுசித்ரா. அவர் சொல்வதில் உண்மை இருக்கிறதோ என்னவோ, அது தொடர்பான நடிகர்கள், நடிகைகள் யாரும் அதுபற்றி கருத்தும் தெரிவிக்க மாட்டார்கள். மறுப்பும் சொல்ல மாட்டார்கள். ரேடியோவில் தொகுப்பாளராக பணிபுரிந்து பிரபலமானவர் சுசித்ரா.

திறமையான பெண்ணாக பார்க்கப்பட்டவர். நடிகர் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர்கள் தனுஷ், சிம்பு மற்றும் சில நடிகைகளுடன் நல்ல நட்பில் இருந்தவர். சில வருடங்களுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்கிற பெயரில் நடிகர், நடிகைகளின் பெயரில் பல அந்தரங்க செய்திகள் வெளிவந்தது.

ஆனால், ‘அது நான் இல்லை. எனது டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து இதை வெளியிடுகிறார்கள்’ என மறுத்தார் சுசித்ரா. அந்த டிவிட்டர் பக்கத்தில் நடிகர்கள், நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியானது. அதில், தனுஷ், திரிஷா, விஜய் டிவி டிடி என பலரும் இருந்தார்கள்.

சுசித்ராவின் கணவர் கார்த்திக்கோ சுசித்ராவுக்கு மனநிலை சரியில்லை என விளக்கம் கொடுத்தார். அதன்பின் சில மாதங்களில் கார்த்திக்கை பிரிந்துவிட்டார் சுசித்ரா. மேலும், சுச்சி லீக்ஸ் என்கிற பெயரில் அனைத்தையும் வெளியிட்டதே கார்த்திக்கும், தனுஷும்தான் என குண்டை தூக்கிப்போட்டார் சுசித்ரா.

தனது முன்னாள் கணவர் கார்த்திக் ஒரு ஓரின சேர்க்கையாளர் எனவும் சொல்லி பதற வைத்தார். அதோடு, கார்த்திக்கை பற்றி தெரியாமல் தனுஷ் அவருடன் சேர்ந்து கூத்தடித்தார் எனவு கொளுத்திப்போட்டார். இந்நிலையில், சமீபத்தில் ஊடகமொன்றில் பேசிய சுசித்ரா தனுஷின் திருமணம் பற்றி பேசினார்.

தனுஷ் எனக்கு நல்ல நண்பராக இருந்தவன். ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்வது பற்றி என்னிடம் சொன்னான். இது முட்டாள்தனம் என எடுத்து சொன்னேன். காதல் கொண்டேன் ஹிட் அடித்தபோது பூச்செண்டு கொடுத்து பாராட்டிய ஐஸ்வர்யா ‘நாம டேட்டிங் போலாமா?’ எனவும் தனுஷிடம் கேட்டார். அது பணக்கார விளையாட்டு. தனுஷுக்கு அப்போது புரியவில்லை. அதேநேரம், தனுஷ் ஒரு சிறந்த நடிகர். ராயன் படம் பார்த்து மிரண்டுவிட்டேன்’ எனப்பேசியிருந்தார்.

இதையும் படிங்க: நடிகைகள் செய்த லீலை! தெறித்து ஓடிய நிவின் பாலி! எல்லாமே பிளான்!.. பாடகி சுசித்ரா பகீர்!..

Next Story