தனுஷ் நல்லவரு தா... ஆனா என்ன சேர்க்கைதா சரியில்ல... இது உலக மகா நடிப்பா இருக்கே...!

by ramya suresh |   ( Updated:2024-09-14 13:11:36  )
தனுஷ் நல்லவரு தா... ஆனா என்ன சேர்க்கைதா சரியில்ல... இது உலக மகா நடிப்பா இருக்கே...!
X

#image_title

தனுஷ் ரொம்ப நல்லவர் தான் ஆனால் அவரின் நண்பர்களால் தான் அப்படி மாறிவிட்டார் என்று பாடகி சுசித்ரா கூறி இருக்கின்றார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 20 ஆண்டுகாலம் பாடகியாக வலம் வந்தவர் சுசித்ரா. தன்னுடைய வசீகரக் குரலால் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார். ஆனால் 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு அனைத்தும் ஒட்டுமொத்தமாக பறிபோனது. 2017 ஆம் ஆண்டு பாடகி சுசித்ரா ட்விட்டர் கணக்கிலிருந்து நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி மிகப்பெரிய வைரலானது.

இந்த செய்தியை ரசிகர்கள் சுசி லீக்ஸ் என்று கலாய்த்து வந்தனர். மேலும் சுசித்ராவின் முதல் கணவரான நடிகர் கார்த்திக் குமார் சுசித்ராவுக்கு மனநிலை பிரச்சனை இருப்பதாக கூறி விவாகரத்து செய்தார். இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் சுசித்ரா பேட்டிக் கொடுத்திருந்தார். அப்போது பேசிய அவர் சுசி லீக்ஸ் விவகாரத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

எனது முன்னாள் கணவர் கார்த்திக் குமாரும் தனுஷும் சேர்ந்து பார்த்த வேலை தான் இது. இதற்கு நான் பலியாகிவிட்டேன் என்று கூறியிருந்தார். மேலும் என்னுடைய கணவர் கார்த்திக் குமார் மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் தனியாக அறையில் இருந்தார்கள். எனது கணவர் ஒரு ஓரினை செயற்கையாளர் என பல விஷயங்களை கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய டாப் நடிகர், நடிகைகளை குறித்து பல விஷயங்களை போல்டாக பேசி இருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் பற்றி youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருக்கின்றார். அப்போது பேசிய அவர் கூறியிருந்ததாவது 'தனுஷ் என்னுடைய தம்பி மாதிரி. நாங்கள் இருவரும் முன்பு நல்ல நண்பர்களாக இருந்தோம். சதி வேலை செய்து எங்களின் நட்பை கெடுத்து விட்டது கார்த்திக் குமார்தான். அவன்தான் உண்மையான வில்லன். அவன் உண்மையான முகம் அனைவருக்கும் தெரிய வேண்டும்.

கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே தனுஷுக்கும் எனக்கும் நல்ல ஒரு நட்பு இருந்தது. நான் அவனை பலமுறை உரிமையுடன் திட்டி இருக்கின்றேன். ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக என்னிடம் வந்து சொன்னபோது கூட நான் அதெல்லாம் வேண்டாம் என்று கூறினேன். அந்த அளவுக்கு நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்து வந்தோம்.

தனுஷ் மற்றவர்களை பழி தீர்க்கும் எண்ணம் கொண்ட நபர் அல்ல. ஒரு நைட்டில் கேடுகெட்ட 20 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து அவனை அப்படி கட்டாயப்படுத்தியதால் தான் தனுஷ் அப்படி செய்திருக்கின்றார். என்னை போல அவரும் பாதிக்கப்பட்டவர் தான். இப்போது அவர் படம் வெற்றி பெற்றதை பார்க்கும்போது மனதளவில் சந்தோஷமாக இருக்கின்றது என்று சுசித்ரா அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் எப்படி எல்லாம் நடிக்கிறாங்க பாருங்க என்று கூறி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் நடிகர் தனுஷ் படம் நன்றாக ஓடியவுடன் அந்தர் பல்டி அடித்து விட்டார் பாடகி சுசித்ரா என்று தெரிவித்து வருகிறார்கள்.

Next Story