Connect with us
VJS

Cinema News

விஜய் சேதுபதி எடுத்த திடீர் முடிவு… காத்துவாக்குல வந்த சேதி..!

படத்துக்குப் படம் தன்னோட நடிப்பில் புதிய பரிமாணத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதில் தீராத தாகத்துடன் இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது 50வது படம் மகாராஜா. இந்தப் படம் வெளியானதில் இருந்து விஜய் சேதுபதி பற்றித் தான் எங்கு போனாலும் பேச்சு. அவரது நடிப்பு. படத்தோட வித்தியாசமான கதை அம்சம்.

இதையும் படிங்க… ரிலீஸ் தேதிக்கே ஆப்பு!.. ஆடிப்போன வெங்கட்பிரபு!.. கோட் படத்திற்கு வந்த சிக்கல்!..

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்சினிமா ஒரு வெற்றியைக் கண்டுள்ளது என்றே சொல்லலாம். இது குறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனும், தயாரிப்பாளர் தனஞ்செயனும் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

விஜய் சேதுபதிக்கு 50வது படமான மகாராஜா மிகச்சிறந்த திரைப்படமாக அமைந்துள்ளது. விஜய்சேதுபதி தன்னோட திரை வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் கேர்ஃபுல்லா அமைச்சிக்கணும். எந்தப் பாதையில் நாம பயணிக்கணும்னு நாம முடிவு பண்ணனும்.

பணமா, வித வித கேரக்டர்களா, ஹீரோவா அந்தஸ்தை உயர்த்தணுமா அதை நோக்கி டிராவல் பண்ணலாம். ஆனா அவருக்கு இதுக்கெல்லாம் ஆலோசனை சொல்ல சரியான ஆலோசகர் இல்லையோ என கூட எனக்கு வருத்தமா இருக்கு.

மிகச்சிறந்த படம். விஜய் சேதுபதிக்கு நல்ல நடிப்பு.ஆனால் கலெக்ஷன் எதிர்பார்த்த அளவு இல்லை. இவ்வாறு சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் சொல்லும்போது விஜய்சேதுபதி தன்னை நடிகனாகத் தான் நிலைநிறுத்தணும்னு நினைச்சார். ஆனா ஹீரோவாகணும்னு நினைக்கல. அவரு நடிப்பு மேல பசி உள்ளவரு.

இந்தி, தெலுங்கு என மற்ற மொழிகளில் நடித்ததும் அது தான் காரணம். ஹீரோ என்றால் வெற்றி, தோல்விகளையும் தாங்க வேண்டும். ரிலீஸ் வாங்கும்போது வரும் பிரஷரையும் தாங்க வேண்டும். கேரக்டர் ரோலில் நடித்தால் அவர்களுக்கு இந்த கவலை இல்லை.

இதையும் படிங்க… மஞ்சள் வீரனே என்னாச்சுன்னு தெரியல?.. 2வது படத்துக்கு ரெடியான டிடிஎஃப்.. டைட்டில் என்ன தெரியுமா?..

இனிமே விஜய்சேதுபதி சைடு ரோல், கேமியோ ரோல், வில்லன் ரோல் என எதுவுமே பண்ணப் போவதில்லை என்று விஜய்சேதுபதி முடிவு எடுத்து விட்டாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top