அஜித் ரேஸ்:
அஜித் கார் மற்றும் பைக் பந்தயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தற்போது மலேசியாவில் நரேன் கார்த்திகேயனுடன் இணைந்து 12 மணி நேர கார் பந்தயத்தில் ஈடுபட்ரு வருகிறார் அஜித். இது பற்றிய செய்திகள் தொடர்ந்து பத்திரிகைகள் மற்றும் youtube சேனல்களில் வந்து கொண்டிருக்கின்றன.
இதில் அவருடைய அணிக்கு ஏழாவது இடம் கிடைத்திருந்தது. அஜித் தலைமையில் நான்கு பேர் கொண்ட அணி gt 3 பிரிவில் பங்கேற்றனர். இந்த பிரிவில் அவருடைய அணிக்கு ஏழாவது இடம் கிடைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் ஏசியன் லீ மென்ஸ் சீரிஸ் தொடரிலும் அஜித் அணி பங்கேற்று வருகிறது.
புதிய யுத்தி:
இதில் வித்தியாசமான ஒரு யுத்தியை அஜித் பயன்படுத்தி இருக்கிறார். அதில் அஜித் இரண்டு கார்களை தன்னுடைய அணிக்காக பயன்படுத்தி வருகிறார். அதில் அஜித் மற்றும் நரேன் ஆகிய இருவரும் ஒரு காரை ஓட்டுகிறார்கள். மற்றொரு காரை அவருடைய அணியினர் இரண்டு பேர் ஓட்டுகிறார்கள்.
இந்த நிலையில் இன்று அஜித் பங்கேற்ற கார் திடீரென பழுதாகி நின்றது. 2025 – 26 ஆம் ஆண்டுக்கான ஏசியன் லீ மென்ஸ் சீரிஸ் தொடர் மூன்று நாடுகளில் நடைபெறுகிறது. இதில் அஜித் நிறுவனம் எல் எம் பி 3 வகையிலான ரேஸ் காரை பயன்படுத்துகிறது. திடீரென அவருடைய கார் பழுதாகி நின்றதால் அங்கு ஒரே பரபரப்பாக காணப்பட்டது.
மீண்டும் ரேஸில் அஜித்:
அதன் பிறகு சிறிது நேரத்தில் பழுது பார்த்து மீண்டும் காரை ஓட்ட தொடங்கினார் அஜித். தொடர்ந்து ரேசில் கவனம் செலுத்தி வரும் அஜித் அடுத்த மாதம் பிப்ரவரி மாதத்தில் இருந்து படத்தில் நடிக்க ஆரம்பிக்கிறார். அஜித் ஆதிக் கூட்டணியில் உருவாகும் அந்த படத்தின் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஏற்கனவே அவர்கள் கூட்டணியில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றதோடு மீண்டும் அதே கூட்டணி என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
