படப்பிடிப்பில் யாரையும் சந்திக்க விரும்பாத கமல்!.. திடீர் விசிட் அடித்த ராமராஜன்.. என்னாயிருக்கும்?..
தமிழ் சினிமாவில் மக்கள் நாயகன், மக்கள் கலைஞர் என்ற அடைமொழியோடு தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ராமராஜன். சாதாரண அஸோசியேட்டிவ் இயக்குனராக இருந்த ராமராஜன் திடீரென ரஜினி, கமலே வியந்து பார்க்கிற நடிகராக வருவார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
கரகாட்டக்காரன் பாதிப்பு
அதுவும் ஹீரோ என்ற நிலையான இடத்தை அடைந்தவுடன் தொட்ட படமெல்லாம் ஹிட் என்ற அந்தஸ்தை அடைந்தார். அதுவும் ‘கரகாட்டக்காரன்’ படம் யாருமே நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியை பதிவு செய்தது. கரகாட்டக்காரன் படம் ஓடிய தியேட்டர்களில் எல்லாம் படம் ஒரு வருடம் கடந்தும் ஓடியது.
எல்லா செண்டர்களிலும் வெற்றி நடைப் போட்டது. அப்படி என்ன தான் இருக்கிறது அந்தப் படத்தில் என ரஜினி, கமல், விஜயகாந்த் என அனைத்து முன்னனி நட்சத்திரங்களும் போய் பார்த்த படமாக கரகாட்டக்காரன் படம் அமைந்தது. அந்தப் படம் தான் ராமராஜனின் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்பு முனையை
ஏற்படுத்திய படமாகவும் விளங்கியது.
ராமராஜன் எடுத்த முடிவு
அதுமட்டுமில்லாமல் அந்தப் படம் நடிகை கனகாவிற்கு ஒரு டர்னிங் பாய்ண்டாக அமைந்தது. இதுவரை யாரும் செய்யாத செயலை ராமராஜன் கரகாட்டக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு செய்தார். தன் உதவியாளர்களை எல்லாம் தயாரிப்பாளராக மாற்றினார். கரகாட்டக்காரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு பெரிய பெரிய பட நிறுவனங்கள் ராமராஜனை தேடி வந்தது.
ஆனால் ராமராஜனோ தான் கஷ்டப்பட்டு வந்ததை எண்ணி சிறு தயாரிப்பாளர்களுக்காக படங்களில் நடிக்க முடிவு எடுத்தார். இந்த செயலாலயே மக்களிடம் மிகவும் ஈர்க்கப்பட்டார் ராமராஜன். இந்த நிலையில் ராமராஜன் யாரும் எதிர்பார்க்காத என்ரியை கமல் படப்பிடிப்பில் கொடுத்தார்.
கமலை சந்தித்த ராமராஜன்
அப்போது பெங்களூரில் கமல் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார். பொதுவாகவே படப்பிடிப்பில் இருக்கும் போது கமல் யாரையும் பார்க்க அனுமதிப்பதில்லை. ஆனால் ராமராஜன் கமலை பார்க்க வருவதாக கூறிவிட்டார். சரி சொல்லிவிட்டாரே என்று கமலும் ஒப்புக் கொண்டார்.
படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் கிட்டத்தட்ட 1000 பேர் சூழ முன்னாடி ராமராஜன் நடந்து வந்து கொண்டிருந்தாராம். அதை பார்த்ததும் கமல் படப்பிடிப்பில் இருந்த அனைவரும் ஷாக் ஆகிவிட்டனராம். அதன் பின் ராமராஜனும் கமலும் நட்பு ரீதியாக பேசிவிட்டு சென்று விட்டாராம். இதை சினிமா இயக்குனர் ராசி அழகப்பன் கூறினார்.
இதையும் படிங்க : விஷயம் கேள்விப்பட்டு அடிச்சு புரண்டு மனைவியோடு வந்த விஜய்!.. என்னவா இருக்கும்?..