யார் கண்ணு பட்டதோ?.. பிரியும் முடிவில் இருக்கும் பாலிவுட் நட்சத்திர ஜோடி?.. இதெல்லாம் ஒரு காரணமாப்பா?..

Published on: March 25, 2023
deepika
---Advertisement---

பாலிவுட்டில் பரபரப்பு ஜோடியாக வலம் வருபவர்கள் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனே. இவர்கள் இருவரும் சேர்ந்து ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்திருக்கின்றனர். உண்மையிலேயே இவர்கள் ரியல் ஜோடியாக மாற மாட்டார்களா? என்று ஏங்கும் அளவிற்கு திரையில் ஜோடி பொருத்தம் கச்சிதமாக இருக்கும்.

deepika1
deepika1

ரசிகர்களின் ஏக்கத்தையும் பூர்த்தி செய்தனர். இருவரும் காதலித்து 2018 ஆம் ஆண்டும் திருமணம் செய்து கொண்டனர். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. அப்போது அந்த திருமணம் மிகவும் பேசுபொருளாக பார்க்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை இருவரும் மிகவும் பிரபலமான ஜோடிகளாக பார்க்கப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் பொது இடங்களில் இவர்கள் வரும் போதும் மிகவும் அந்நியோன்யமாக இருப்பார்கள். இவர்களை பார்த்தாலே பொறாமை படும் அளவுக்கு இவர்களின் பழக்கங்கள் இருக்கும்.

deepika2
deepika2

ஒருவருக்கொருவர் விடாமல் எப்போதும் கைகோர்த்தபடி , கண்களால் பேசிய படி மேடையில் எப்போதும் ரன்வீர் தீபிகாவை பார்த்து ப்ரபோஸ் பண்ணுவதும் முத்தம் கொடுப்பதும் பார்க்கவே ரசிக்கும் படியாக இருக்கும். அப்படி இருந்த ஜோடியின் உறவில் இப்போது விரிசல் ஏற்படப் போவதாக இணையத்தில் ரசிகர்களுக்கிடையே பெரிய வாக்குவாதமே நடந்து கொண்டிருக்கின்றன. ஏனெனில் அப்படி ஒரு சம்பவம் அண்மையில் நடந்தேறியிருக்கிறது. ஒரு விழாவிற்கு தீபிகா அவரது தந்தை கணவருடன் வந்திருக்கிறார்.

காரை விட்டு இறங்கியதும் எப்போதும் ரன்வீர் தீபிகாவின் கைகோர்த்தப் படி நடப்பது வழக்கம். அதே போல் அந்த சமயத்திலும் ரன்வீர் தீபிகாவின் கையை பிடிக்க கை நீட்டிக் கொண்டே இருந்திருக்கிறார். ஆனால் தீபிகா அவரது புடவையை சரி பண்ணியபடி இருந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் புகைப்படம் எடுக்கும் போது தீபிகா, அவரது தந்தை, ரன்வீர் என மூன்று பேரும் புகைப்படம் எடுத்திருக்கின்றனர்.

deepika3
deepika3

அதன் பிறகு ரன்வீர் மற்றும் தீபிகா மட்டும் எடுக்க வேண்டும் என நினைக்க மாறி மாறி மூன்று பேருமாக எடுத்திருக்கின்றனர். மேலும் சமூக வலைதளத்தில் பிஸியாக இருக்கும் இருவருமே தீபிகா பதிவிடும் எந்த ஒரு புகைப்படமானாலும் முதல் ஆளாக லைக்குகள் மற்றும் ஹார்ட் சிம்பள்களை பதிவிடுவது ரன்வீரின் வழக்கம். ஆனால் சில தினங்களாக ரன்வீர் சிங்கிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லையாம். இதனாலேயே இருவருக்கும் விரிசல் ஏற்பட்டிருக்கிறது என்று கூறிவருகின்றனர்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.