அத்தனை கோடி சம்பளம்!.. ஆனாலும் ஷங்கர் படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த நடிகர்...
தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம்சரனை வைத்து தெலுங்கு, தமிழில் உருவாகும் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இது அரசியல் ஆக்ஷன் திரைப்படமாகும். இப்படத்தில் ராம் சரண் 2 வேடங்களில் நடிக்கவுள்ளார்.
இதையும் படிங்க: சுதீப் வாங்கும் சம்பளம் என்ன தெரியுமா?…தமிழ் நடிகர்கள் பார்த்து கத்துக்குங்கப்பா!..
மேலும், அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பட வேலைகள் விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தை தெலுங்கில் பல கோடிகளில் திரைப்படங்களை தயாரிக்கும் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் வில்லனாக நடிக்க கன்னட நடிகர் சுதீப்பை படக்குழு அணுகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குனர், தெலுங்கில் முன்னணி நடிகர், பெரிய பட்ஜெட் படம், ஆனாலும், இப்படத்தில் நடிக்க சுதீப் மறுத்துவிட்டாராம்.
கன்னட சினிமாவில் ரூ.12 கோடி சம்பளம் பெறுகிறார் சுதீப். ஷங்கர் படத்தில் வில்லனாக நடிக்க அவருக்கு ரூ.15 கோடி சம்பளம் தருவதாக பேசப்பட்டதாம். ஆனாலும் அப்படத்தில் நடிக்க சுதீப் மறுத்துவிட்டார். எனவே, வேறு நடிகரை தேடும் படலம் தற்போது நடந்து வருகிறது.
சுதீப் நான் ஈ உள்ளிட்ட பட படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.