ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருந்த நடிகை.. விஜயகாந்த் சும்மா இருப்பாரா?

by Rohini |   ( Updated:2025-03-31 09:00:11  )
vijayakanth
X

vijayakanth

சினிமாவில் ஒரு சில பேரைத்தான் லெஜெண்ட்டாக நாம் பார்ப்போம். அவர்களை எந்த காலத்துக்கும் நம்மால் மறக்கவே முடியாது. எம்ஜிஆர், பியூ சின்னப்பா போன்ற ஒரு சில நடிகர்களை குறிப்பிடலாம். அந்த வகையில் இப்போது விஜயகாந்தும் இணைந்துவிட்டார். எம்ஜிஆருக்கு அடுத்த படியாக மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட நடிகராக விஜயகாந்த் பார்க்கப்பட்டார். ஏன் கருப்பு எம்ஜிஆர் என்று கூட அழைக்கப்பட்டார்.

தன் கெரியரில் கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜயகாந்த். இவரின் மறைவு தமிழ் சினிமாவிற்கு ஒரு பேரிழப்பு ஆகும். இன்று வரை விஜயகாந்தை தன் பூஜையறையில் வைத்து வணங்குபவர் உண்டு. அவருக்காக தனியாக ஒரு மண்டபமும் கட்டி மக்கள் அங்கு நாள்தோறும் கூட்டமாக போவதையும் நாம் பார்த்து வருகிறோம்.

தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் மிகுந்த பற்று கொண்டவர் விஜயகாந்த். அதனால்தான் தமிழைத்தவிற வேறெந்த மொழிகளிலும் அவர் நடிக்கவே இல்லை. பல வாய்ப்புகள் அவரைத்தேடி வந்தும் எல்லாவற்றையும் மறுத்துவிட்டார். பெரும்பாலும் படங்களில் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து தன்னுடைய ரசிகர்களுக்கு நல்லவற்றையே சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் பிரபல நடிகை ஒருவர் தனக்கு தமிழ் பேசக் கற்றுக் கொடுத்ததே விஜயகாந்த்தான் என்று கூறியிருக்கிறார்.அவர் வேறு யாருமில்லை. பிரபல பரத நாட்டிய கலைஞர் சுதா சந்திரன். வசந்த ராகம் படத்தில் விஜயகாந்துடன் சேர்ந்து நடித்தார். அந்தப் படத்தில் குட்டி விஜயகாந்தாக விஜய் நடித்திருந்தார். அந்தப் படத்தில் நடிக்கும் போது சுதா சந்திரனுக்கு தமிழ் பேச தெரியாதாம்.

ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில்தான் பேசுவாராம். அதுவும் நடிகர் ரகுமானும் சுதா சந்திரனும் ஆங்கிலத்திலேயேதான் உரையாடுவார்களாம். அதனால் விஜயகாந்த் தனியாக வெளியில் போய் உட்கார்ந்துவிடுவாராம். உடனே சுதா சந்திரன் ஏன் சார் இங்க வந்து உட்கார்ந்து விட்டீர்கள் என்று கேட்டால் நீங்கள் ஒரே ஆங்கிலத்தில்தான் பேசுறீங்க? எனக்கு தெரியாது என்று சொன்னாராம்.

sudha

அன்றிலிருந்து சுதா சந்திரன் தமிழை கற்றுக் கொள்ள ஆரம்பித்தாராம். நாகினி தொடரில் ஒரு முக்கியமான கேரக்டரில் சுதா சந்திரன் நடித்திருப்பார். அந்த தொடரை பார்த்துவிஜயகாந்த் சுதா சந்திரனுக்கு போன் செய்து ‘பரவாயில்லையே நல்லா நடிக்கிறீயே’ என்று சொன்னாராம்.

Next Story