Sivakarthikeyan: விஜய் டிவியில் ஆங்கராக தனது கெரியரை துவங்கி சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியிருப்பவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
எனவே, பல தயாரிப்பாளர்களின் பார்வை சிவகார்த்திகேயன் பக்கம் திரும்பி இருக்கிறது. அமரன் ஹிட்டுக்கு பின் 50 கோடிக்கும் மேல் சம்பளம் கேட்கும் நடிகராக மாறியிருக்கிறார் எஸ்.கே. அதோடு, பெரிய பெரிய நிறுவனங்கள மற்றும் இயக்குனர்களுடன் கை கோர்க்க முடிவெடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஒரே வார்த்தை!.. நயன்தாராவுக்கு பதிலடி கொடுத்த தனுஷ்.. அப்படி என்னப்பா சொன்னாரு?..
அமரன் படத்தில் நடிப்பதற்கு முன்பே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க துவங்கினார். சில நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதன்பின் சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் நடிக்கப் போய்விட முருகதாஸோ பாலிவுட்டுக்கு போய் சல்மான் கானை வைத்து ஒரு படத்தை இயக்க துவங்கினார்.
எனவே, முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தின் மறு படப்பிடிப்பு மார்ச் மாதம்தான் மீண்டும் துவங்குவதாக சொல்லப்படுகிறது. எனவே, சும்மா இருக்கக்கூடாது என கருதிய எஸ்.கே டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தியை அழைத்து பேசி ஒரு புதிய படத்தின் வேலையை துவங்கிவிட்டார்.

ஒருபக்கம், சூரரைப்போற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க மறுத்து வெளியேறிய புறநானூறு படத்தில் எஸ்.கே. நடிப்பது உறுதியாகிவிட்டது. இந்த படத்தின் வேலைகளும் வேகமாக நடந்து வருகிறது. தற்போது முகத்தில் அதிக அளவு தாடி வைத்து காணப்படுகிறார் எஸ்.கே.
இந்நிலையில், அவரை பார்த்த சுதா கொங்கரா ‘பருத்தி வீரன் கார்த்தி போல இவ்வளவு தாடி வைத்திருந்தால் எப்படி?’ என அவரின் காதுக்கு கேட்கும்படியே கத்த, இதனால் கோபமான எஸ்.கே. அங்கிருந்து வெளியேறி விட்டாராம். எனவே, புறநானூறு படம் டேக் ஆப் ஆகுமா என்பது தெரியவில்லை என செய்திகள் கசிந்திருக்கிறது.
இதையும் படிங்க: அந்த மேக்கப் கிட் 2 லட்சம் இருக்கும்.. ஃப்ரீயா கொடுத்த கமல்! யாருக்கு தெரியுமா?
