சூர்யா பட இயக்குனருடன் இணையும் சிம்பு - ரகசியமாக நடந்த மீட்டிங்
இறுதிச்சுற்று திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சுதா கொங்கரா பிரசாத். இப்படத்தில் குத்துச்சண்டையை வேறு விதமாக காட்டி அசத்தியிருந்தார். இப்படத்தில் மாதவன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் தெலுங்கு, ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.
அதன்பின் சுதா கொங்கரா இயக்கிய திரைப்படம் சூரரைப்போற்று. இப்படத்தை சூர்யா தயாரித்து நடித்திருந்தார். குறைவான விலையில் விமான பயண சேவையை கொடுக்க நினைத்த ஒருவரின் நிஜக்கதையை சினிமாவாக மாற்றினார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் , இயக்கம் என அனைத்தும் சிறப்பாக இருந்தது. இப்படத்தின் கதை இண்டர்நேசனல் ரேஞ்சுக்கு இருந்ததால் இப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் சுதா கொங்கராவும், சிம்புவும் சந்தித்து பேசியுள்ளனர். இதற்கு முன்னர் 2 முறை அவர்கள் சந்திப்பு நடந்துள்ளது. தனிப்பட்ட முறையில் சுதா கொங்கராவும், சிம்புவும் நல்ல நண்பர்களும் கூட. எனவே, விரைவில் அவர்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அஜித்தும், சுதா கொங்கராவும் ஒரு படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.