
Cinema News
மீண்டும் மீண்டுமா.?! பாலிவுட்டில் ரிஸ்க் எடுக்க தயாரான சூர்யா.! ஆண்டவன் தான் காப்பாத்தணும்.!
தொடர்ந்து சூர்யாவின் திரைப்படங்கள் சரியாக போகாத நேரத்தில், சூர்யாவுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் சூரரை போற்று. இந்த திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். கேப்டன் ஜி.என்.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் சூர்யா தனது 2டி நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருந்தார்.
இப்படம் தயாராகி தியேட்டரில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நேரத்தில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படம் அமேசான் OTT தளத்தில் வெளியானது. இருந்தாலும் OTTயில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு அமேசான் OTT தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. தற்போது இப்படம் இந்தியில் தயாராக உள்ளது. இந்தியிலும் சுதா தான் இயக்கவுள்ளார். 2டி நிறுவனம் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக மாறியுள்ளது. இதன் மூலம் ஹிந்தி படத்தை நேரடியாக தயாரிக்க கால் பதித்துள்ளார் சூர்யா.
ஆனால், சூரரை போற்று திரைப்படம் ஏற்கனவே இந்தியில் டப் செய்யப்பட்டு உதான் எனும் பெயரில் அமேசான் தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும், இத்திரைப்படம் அண்மையில்தான் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.
ஏற்கனவே ஹிந்தியில் வெளியான ஒரு திரைப்படத்தை, மீண்டும் அதே கதையை வைத்துக்கொண்டு சுதா கொங்கரா, அக்ஷய் குமாரை ஹீரோவாக வைத்து மீண்டும் எடுக்க உள்ளார். அந்த படத்தின் ஒரு தயாரிப்பாளராக சூர்யாவும் இருக்கிறார். இதனால் சூர்யா ரிஸ்க் எடுக்கிறார் என்ற எண்ணம் பலருக்கும் எழுந்துள்ளது.
இதையும் படியுங்களேன் – ஓரே ஒரு குத்து பாட்டுக்கு சம்மதித்த நயன்தாரா.! கேட்டது விஜய் பட மெகா ஹிட் இயக்குனராச்சே.!
தற்போது வந்த தகவலின் படி சுதா கொங்கரா சூரரைப்போற்று திரைப்படத்திலிருந்து முக்கியமான விஷயங்களை மட்டும் எடுத்து கொண்டு, ஹிந்திக்கு ஏற்றவாறு பல்வேறு மாற்றங்களை செய்து பிரம்மாண்டமாக இந்த திரைப்படத்தை எடுக்க உள்ளாராம். அதனால் இந்த திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் படக்குழு பாலிவுட்டில் களமிறங்கியுள்ளது என்கிறது திரை வட்டாரம்.