ஆஸ்கர் வாங்கிய படத்துக்கு வாழ்த்து சொல்லாத சூர்யா பட இயக்குனர்… இதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா?
சூரரை போற்று
கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் “சூரரைப் போற்று”. இத்திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இத்திரைப்படம் சூர்யாவின் கேரியரில் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
இத்திரைப்படத்தை சூர்யா, குனீத் மோங்கா ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். மேலும் இத்திரைப்படம் 5 தேசிய விருதுகளை பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் விருதுகள்
95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்றுள்ள நிலையில் “RRR” திரைப்படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடலுக்கு சிறந்த பாடலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழில் வெளியான “எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்” என்ற ஆவண குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
கமுக்கமாக இருக்கும் இயக்குனர்
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி, சுதா கொங்கரா குறித்த ஒரு முக்கிய தகவலை தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது “எலிஃபென்ட் விஸ்பரரஸ்” ஆவண குறும்படம் ஆஸ்கர் வாங்கிய நிலையில் திரைத்துறையை சேர்ந்த பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் சுதா கொங்கரா பாராட்டுத் தெரிவிக்கவில்லையாம்.
இதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறதாம். அதாவது “எலிஃபென்ட் விஸ்பரரஸ்” ஆவண குறும்படத்தை தயாரித்த குனீத் மோங்கா, “சூரரை போற்று” திரைப்படத்தை சூர்யாவுடன் இணைந்து தயாரித்திருந்தார். அப்போது சில கணக்கு வழக்குகளில் குனீத் மோங்காவுக்கும் சுதா கொங்கராவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாம். ஆதலால்தான் குனீத் மோங்கா தயாரித்த “எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்” ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் கிடைத்ததற்கு சுதா கொங்கரா வாழ்த்து தெரிவிக்கவில்லையாம். இவ்வாறு வலைப்பேச்சு பிஸ்மி அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: சுனைனாவை விடாமல் டார்ச்சர் செய்த பிரபல நடிகையின் தம்பி… இவரா இப்படி நடந்துக்குட்டாரு!!