இறுதிச்சுற்று படம் எடுக்க இவங்க தான் இன்ஸ்பிரேஷன்!.. அந்தர் பல்டி அடித்த சுதா கொங்கரா!..

by Saranya M |   ( Updated:2023-11-26 08:30:16  )
இறுதிச்சுற்று படம் எடுக்க இவங்க தான் இன்ஸ்பிரேஷன்!.. அந்தர் பல்டி அடித்த சுதா கொங்கரா!..
X

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் நடித்து வெளியான இறுதிச்சுற்று திரைப்படம் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

அமீர் மற்றும் ஞானவேல் ராஜா பிரச்சனையில் இயக்குனர் சுதா கொங்கராவின் பெயரும் தற்போது நெட்டிசன்களால் சிக்கி சீரழிந்து வரும் நிலையில், அதிரடியாக ஒரு போஸ்ட்டை போட்டு பெரிய கும்பிடாக போட்டுள்ளார் சுதா கொங்கரா.

இதையும் படிங்க: பருத்திவீரன் படத்துக்காக இவ்வளவு கஷ்டமா?!.. பாத்து பாத்து செய்த இயக்குனர் அமீர்!..

சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா அடுத்து அக்‌ஷய் குமாரை வைத்து அதே படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக மீண்டும் சூர்யாவை வைத்து புறநானூறு எனும் படத்தையும் அவர் இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அமீர் மற்றும் ஞானவேல் ராஜா பிரச்சனையில் அமீர் குறித்து மோசமாக சுதா கொங்கரா விமர்சித்ததாக பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், இறுதிச்சுற்று படம் உருவாக காரணமே பருத்திவீரன் படத்தில் இடம்பெற்ற முத்தழகு கதாபாத்திரம் தான் என பெரிய பதிவை போட்டுள்ளார்.

இதையும் படிங்க: இறுதிச்சுற்று கதையை ஆட்டையப்போட்டாரா சுதா கொங்கரா?.. வைரலாகும் பெண் வீராங்கனையின் வீடியோ!..

பிப்ரவரி 2, 2016, இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது என ஆரம்பித்த சுதா கொங்கரா, பிரசாத் ஸ்டுடியோவிற்கு வெளியில் சென்று கொண்டிருந்தேன்... நன்றாக நியாபகம் இருக்கிறது, ஏன் என்றால், இறுதி சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து பாராட்டிய சிலரில் அமீர் அண்ணாவும் ஒருவர்... நான் ஒரே ஒரு விஷயம்தான் அவரிடம் சொன்னேன்... என் படத்தில் வந்த மதியின் கதாப்பாத்திரம் முத்தழகின் பாதிப்புதான் என்று.

மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த ஹீரோயின்களிடம் பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாரு தான் சொல்லி அனுப்பினேன். அதுதான் தமிழ் சினிமாவில் தடம் பதித்த மிகச்சிறந்த ஓர் இயக்குனருக்கு நான் செய்யும் மரியாதை... இதுதான் நான் சொல்ல விரும்பும் விஷயம்.. நன்றி... என சுதா கொங்கரா பதிவிட்டுள்ளார்.

Next Story