சூர்யா படத்துக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்.! இதுல அவுங்களுக்கும் ஆதாயம் இருக்குதுல்ல.!?

by Manikandan |   ( Updated:2022-03-20 10:15:36  )
சூர்யா படத்துக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்.! இதுல அவுங்களுக்கும் ஆதாயம் இருக்குதுல்ல.!?
X

சூர்யாவை வைத்து சூரரைப்போற்று எனும் திரைப்படத்தை இயக்கி முடித்தவர் சுதா கொங்கரா. சூர்யாவிற்கு ஒரு பெரிய வெற்றி தேவைப்பட்ட சரியான நேரத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக சூரரைபொற்று திரைப்படத்தை இயக்கி கொடுத்தார் சுதா கொங்கரா.

ஆனால், அந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகமல் அமேசான் OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. இருந்தாலும் அமேசான் தளத்தில் வெளியாகி இத்திரைப்படம் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து, சுதா கொங்கரா, சூரரை போற்று திரைப்படத்தை தற்போது ஹிந்தியில் மறு உருவாக்கம் செய்ய உள்ளாராம். அதற்கான கதை விவாதம் பணிகள் நடைபெற்று வருகிறதாம்.

இந்தநேரத்தில் சுதா கொங்கரா தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தில் பணியாற்ற உள்ளாராம். பாலிவுட் திரைப்படத்தையும் விட்டுவிட்டு சூர்யா படத்திற்கு வர காரணம் என்ன விசாரிக்கையில், இந்த திரைப்படத்தில் சுதா கொங்கரா எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்ற உள்ளாராம்.

இதையும் படியுங்களேன் - உன்னால நான் கெட்ட.! என்னால நீ கெட்ட.! பாவம் அந்த மனுஷன் என்ன பண்ணாரு.?!

அதாவது, தயாரிப்பு செலவு பணிகளை கவனிக்கும் பணி. இதன்மூலம் எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு காசு செலவாகிறது என்பதை சரியாக கவனிக்க முடியும்.

இதனை செய்து முடிப்பதால், சுதா கொங்கராவுக்கு தனது அடுத்த பட இயக்கத்தில் அல்லது தயாரிப்பிலும் பட்ஜெட் ஒதுக்கும்போது இதற்கு இவ்வளவுதான் செலவு செய்ய முடியும் என இவரால் தீர்மானம் செய்ய முடியும். இந்த பணி அவரது அடுத்தடுத்த படங்களுக்கு உதவிகரமாக இருக்கும். என்பதால் இப்படத்தில் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளராக களம் இறங்கி உள்ளார் இயக்குனர் சுதா கொங்காரா என கூறப்படுகிறது.

Next Story