ரஜினி, கமல் நடிக்க வேண்டிய படத்தில் வேற ஹீரோ!.. ஆனாலும் சொல்லி அடித்த பாரதிராஜா...

by சிவா |
bharathi raja
X

Bharathiraja: தமிழ் சினிமாவில் புதுமாதிரியான இயக்குனராக அதிரடியாக நுழைந்தவர்தான் பாரதிராஜா. அவர் வரும் வரை இப்படியெல்லாம் சினிமா எடுக்க முடியுமா என பலருக்கும் தெரியவே தெரியாது. பாரதிராஜா அவரின் திரைப்படங்களில் காட்டியது போல கிராமங்களை, கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை, காதலை, கோபத்தை அதற்கு முன் தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்தது இல்லை.

ஸ்டுடியோவில் மட்டுமே இயங்கி வந்த தமிழ் சினிமா பாரதிராஜா வந்த பின்னர்தான் கிராமத்து பக்கமும், வயல், வரப்பு பக்கமும் போனது. அவ்வளவு மண்வாசனை உள்ள திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் உணர்ந்ததே இல்லை. பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமானார்.

இதையும் படிங்க: இளையராஜா இசையில் அற்புதம்… அதிசயம்… ஒரே ராகத்தில் மாறுபட்ட இரு பாடல்கள்…!

முதல் படத்திலேயே ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகியோரை வைத்து இயக்கியிருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. பொதுவாக முதல் படம் வெற்றி அடைந்துவிட்டால் அதன்பின் பெரிய ஹீரோக்களை வைத்து மட்டுமே திரைப்படங்களை இயக்குவார்கள். ஆனால், 2வது படத்தை முழுக்க புதுமுக நடிகர், நடிகைகளை வைத்து பாரதிராஜா எடுத்தார்.

bharathi raja

அப்படி ராதிகா, சுதாகர் ஆகியோரை வைத்து இயக்கிய திரைப்படம்தான் கிழக்கே போகும் ரயில். இந்த படத்தை எடுக்கும்போது அவருக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்தனர். பாரதிராஜாவுக்கு திமிறு அதிகம். புதுமுக நடிகர்கள் நடிக்கும் படம் ஓடாது என்று எழுதினார்கள். ஆனால், அப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின், புதிய வார்ப்புகள், சிகப்பு ரோஜக்கள் என தொடர்ந்து எடுத்தார். தொடர்ந்து 5 வெள்ளிவிழா திரைப்படங்களை கொடுத்த ஒரே இயக்குனர் இவர்தான்.

இதையும் படிங்க: என்னடா இது தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!.. கலைஞர் 100 விழாவில் காலி சேர்கள்.. ரஜினி செம அப்செட்!

5 படங்களுக்கு பின் மீண்டும் ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகியோரை வைத்து ஒரு படத்தை அவர் இயக்கவிருந்தார். அந்த படத்திற்கு ‘ராக மாலிகா’ என தலைப்பும் வைக்கப்பட்டு அறிவிப்பும் வெளியானது. ஆனால், அப்படத்தின் தயாரிப்பாளர் திடீரென இறந்துபோனார். அதன்பின் ரஜினிக்கும், பாரதிராஜாவுக்கும் இடையே சிறு மனக்கசப்பும் ஏற்பட்டது. எனவே, அவர் அதில் நடிக்கவில்லை.

எனவே, சுதாகர், ராதிகாவை வைத்து நிறம் மாறாத பூக்கள் என்கிற பெயரில் அப்படத்தை இயக்கினார். இந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் நிழல்கள், காதல் கீதம் என சறுக்கினாலும் மண் வாசனை, கடலோரக் கவிதைகள், முதல் மரியாதை என ஹிட் படங்களை கொடுத்தார்.

இதையும் படிங்க: நயன்தாராவுக்கு புடிச்ச விஷயம்!.. இப்படி விக்னேஷ் சிவனுக்கு எல்லாமே வினையா முடியுதே.. ஏன்?

Next Story